அடுத்து அங்குதான் வருகிறோம் காஸ்மீர் குறித்த பேச்சு வைகோவை வெளுத்து வாங்கிய அமிட்ஷா

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

டெல்லி.,

இந்திய வரலாற்றில் முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது மத்திய அரசு ஆம் இனி காஷ்மீர் மாநிலம் நிரந்தரமாக மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து 370 மற்றும் 35 A நீக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டு யூனியன் பிரதேச அந்தஸ்து காஷ்மீருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இனி மாநில அரசு எந்த சட்டத்தையும் நிறைவேற்ற முடியாது முழுவதும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வந்துவிடும்.

Loading...

இதில் ஆச்சரியப்படக்கூடிய விஷயம் என்னவென்றால் சிறப்பு அந்தஸ்து நீக்கம் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது குடியரசுத்தலைவரும் சட்டத்திருத்தம் நீக்கத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

READ  இந்துமதம் குறித்து மிக கேவலமாக மீண்டும் விமர்ச்சித்த கிறிஸ்தவ பாதிரியார் சற்குணம் வீடியோ தானாக முன்வந்து கைது செய்ய நடவடிக்கை எடுக்குமா நீதிமன்றம்?

இந்நிலையில் தற்போது விவாதத்தின் போது திமுக மாநிலங்களவை உறுப்பினர் வைகோ இது மிகவும் தவறான செயல் இந்தியாவில் பல இடங்களில் தீவிரவாத அச்சுறுத்தல் இருக்கிறது அங்கெல்லாம் இதுபோன்றp நடவடிக்கை எடுக்காதது ஏன் என்றும் இது மீண்டும் எமெர்ஜென்சி காலத்தை நினைவு படுத்துவதாக எதிர்ப்பு தெரிவித்தார்.

இதற்கு உடனடியாக பதிலடி கொடுத்த அமிட்ஷா மோடி தலைமையிலான மத்திய அரசு நாட்டில் தீவிரவாதிகளை கண்டு எங்கும் அஞ்சாது நாட்டில் உள்ள அனைத்து பகுதிகளின் தீவிரவாதிகளையும் முடிவுக்கு கொண்டுவர தயாராக இருக்கிறோம் என்றதுடன் அடுத்து அங்குதான் வருகிறோம் என்றும் அமிட்ஷா வைகோவை எச்சரித்தார்.

இதன்மூலம் அடுத்து மத்திய அரசின் பார்வை தனித்தமிழ்நாடு கோசம் போட்ட பிரிவினைவாதிகளை நோக்கி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

READ  பெற்றோர்கள் திட்டியதால் விஷம் குடித்துவிட்டு பள்ளிக்கு சென்ற மாணவிக்கு நேர்ந்த கொடுமை...

இந்நிலையில் தற்போது காஷ்மீர் மாநிலத்தின் தனி கொடிகளை இறக்கும் நடவடிக்கைளில் ராணுவம் இறங்கியுள்ளது.

©TNNEWS24

இது போன்ற செய்திகளை உங்களது வாட்சப் எண்ணில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் அனுப்பவும்


இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here