திமுக தலைவர் ஸ்டாலினுக்கு துடைத்து விட்டதெல்லாம் வீண் ! வைகோவின் எம் பி கனவு அம்பேல் ?

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

2009-ஆம் ஆண்டு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மீது பதிவான தேச துரோக வழக்கு மீதான தீர்ப்பை, சென்னை சிறப்பு  நீதிமன்றம் இன்று வழங்கி உள்ளது.

கடந்த 2009-ஆம் ஆண்டு நடைபெற்ற ‘நான் குற்றம்சாட்டுகிறேன்’ என்ற புத்தக வெளியீட்டு விழாவில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவரின் பேச்சு, மத்திய அரசுக்கு எதிராகவும், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும் இருந்ததாக கூறி வைகோ மீது தேச துரோக ‌வழக்கு ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தினரால் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் 4ஆம் தேதி புழல் சிறைக்கு அனுப்பப்பட்ட வைகோ மே 25-ஆம் தேதி ஜாமீனில் வெளியே வந்தார். 

பின்னர் இந்த வழக்கு சென்னை சென்னை மாவட்ட கூடுதல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட பிறகு 2018 ஆகஸ்ட் 2-ஆம் தேதி குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.  கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் எம்.பி.,எம்.எல்.ஏ-க்கள் மீதான சிறப்பு நீதிமன்றம் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டவுடன், இந்த வழக்கு அங்கு மாற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து அரசு தரப்பில் சமர்ப்பிக்கப்பட்ட 9 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. சாட்சியத்தின் அடிப்படையில் வைகோவிடம் விளக்கம் கேட்கப்பட்டது. இதனையடுத்து வழக்கின் தீர்ப்பை ஒத்திவைப்பதாக ஜூன் 19-ஆம் தேதி நீதிபதி ஜெ.சாந்தி உத்தரவிட்டிருந்தார்.

READ  தமிழக பாஜக தலைவராக யார் வர வாய்ப்பு அதிகம் இருக்கிறது என்ன சொல்கிறது டெல்லி தலைமை?

இந்நிலையில் வழக்கின் தீர்ப்பை சென்னை சிறப்பு நீதிமன்றம் ‌இன்று வழங்கி உள்ளது.

இன்று சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பை ஒரு மாதத்திற்கு தள்ளி வைத்துள்ளது. இதனால் வைகோ மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு மனு தாக்கல் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஒரு வேலை ஒரு மாதம் கழித்து தீர்ப்பு வைகோவிற்கு எதிராக வெளியானால் அவர் எம் பி பதவியும் கேள்விக்குறியாகும் இதனால் நிச்சயம் வைகோ மாநிலங்களவைக்கு செல்ல முடியாத சூழல் உருவாகி இருபத்தாக கூறப்படுகிறது.

இதில் கொடுமை என்னவென்றால் திமுக ஆட்சியில் இந்த வழக்கு பதியப்பட்டு தற்போது திமுகவால் கிடைத்த எம் பதவிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதால் தற்போது வைகோ யாரையும் எதிர்த்து பேசமுடியாமல் கதறி வருகிறாராம்

©TNNEWS24

செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.

READ  தமிழகத்தில் உருவானது காவி படை ! சிறை சாலையில் கெத்து காட்டிய பாஜகவினர்
Loading...

இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here