வேலூர் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பினை வெளியிட்டது தந்தி டிவி யாருக்கு வெற்றி வாய்ப்பு?

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

வேலூர்.,

வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்திற்கு நெருக்கமான இடங்களில் கோடிக்கணக்கான பணம் பறிமுதல் செய்யப்பட்டதால் நிறுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து மீண்டும் தேர்தல் ஆகஸ்ட் 5 நடைபெற்றது.

அதிமுக, திமுக இரண்டு கட்சிகளுமே இந்த தேர்தலை தங்கள் கவுரவ பிரச்னையாக எடுத்துக்கொண்டுள்ளனர், அதிமுகவை பொறுத்தவரை நாடாளுமன்ற தேர்தலில் அடைந்த படுதோல்விக்கு வேலூர் தேர்தல் வெற்றியின் மூலம் மீண்டும் தொண்டர்களை உற்சாகப்படுத்தலாம் என்று கணக்கிட்டுள்ளனர்.

திமுகவை பொறுத்தவரை வேலூர் தொகுதி இடைத்தேர்தலில் தோல்வி அடைந்தால், பொய்யான வாக்குறுதிகளை ( நகைக்கடன் தள்ளுபடி, கல்விக்கடன் தள்ளுபடி ) நம்பி மக்கள் ஏமாந்துவிட்டார்கள் இப்போது தெளிவான நிலைக்கு தமிழக மக்கள் வந்துவிட்டார்கள் என்று ஆளும்தரப்பு குற்றம் சுமத்தும் அந்த அளவிற்கு செல்லக்கூடாது என தீவிரமாக வேலை பார்த்து வந்தனர்.

READ  நாடகமாடி தங்கள் குடும்ப ஊடகங்களை வைத்து மக்களை ஏமாற்றும் திமுக - தமிழிசை பதிலடி

இறுதியில் களத்தில் பல்வேறு மாற்றங்கள் தென்பட்டன, இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் கூட ஓரளவிற்கு AC சண்முகத்திற்கு வாக்குகள் பதிவாகி இருப்பதாக அதிமுக தலைமை கணக்கெடுத்து வைத்துள்ளது.

தமிழகத்தை சேர்ந்த பிரபல தொலைக்காட்சி தந்தி டிவி வேலூர் தொகுதி தேர்தலுக்கு முன்பு கருத்து கணிப்பு வெளியிட்டதுபோல் தற்போது தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளது அதில். தேர்தலுக்கு பின்பு யாருக்கு வாக்களித்தீர்கள் என்று வேலூரின் பல்வேறு வாக்கு சாவடிகளில் 100 கணக்கான நபர்களை வைத்து தேர்தல் நிலவரங்களை கணித்ததாக கூறி இருக்கிறது.

அதன் படி நடந்து முடிந்த வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 46- 52% வாக்குகளை பெறுவார் என்றும்

READ  #BIGBREAKING ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணுவம் குவிப்பு சொன்னபடி ஆட்டத்தை ஆரம்பித்தது பாஜக ! மெகபூவா முப்தி உள்ளே

அதிமுக வேட்பாளர் AC சண்முகம் – 41- 47% வாக்குகளை பெறுவார்கள் என்றும்

நாம் தமிழர் கட்சியினர் 4-7% வாக்குகளை பெறுவார்கள் என்றும்,
மற்றவை 3-6% வாக்குகளை பெறுவார்கள் என்றும் கணித்துள்ளது.

இதன்படி தற்போது வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி பெற அதிக வாய்ப்புகள் இருப்பதாக தந்தி டிவி தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளது.

©TNNEWS24

இது போன்ற செய்திகளை உங்களது வாட்சப் எண்ணில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் அனுப்பவும்

Loading...

இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here