வேலூர் தொகுதியில் வெற்றி யாருக்கு சற்று முன் வெளியான பிரபல நிறுவனத்தின் கருத்து கணிப்பு !

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

வேலூர்.,

கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின் போது வேலூர் தொகுதியின் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்திற்கு நெருக்கமான இடங்களில் வாக்காளர் பெயர்களுடன் கோடிக்கணக்கான பணம் பறிமுதல் செய்யப்பட்டது அதனை தொடர்ந்து வேலூர் நாடாளுமன்ற தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

தற்போது மீண்டும் வேலூர் தொகுதிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்ட சூழலில் வேலூர் தொகுதியை யார் கைப்பற்றுவார் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது அதிமுக சார்பில் முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் தீவிர பிரச்சாரம் மேற்கொள்கின்றனர். திமுக சார்பில் திமுக தலைவர் ஸ்டாலின் பிரச்சாரம் செய்து வருகிறார்.

Loading...

இந்நிலையில் வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் யார் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக சிங்கப்பூரை சேர்ந்த பிரபல நிறுவனமான ஒ பி சி இன்போடெய்ன்மெண்ட் தனது கருத்து கணிப்பினை வெளியிட்டுள்ளது. இதற்கு முன்னர் இந்த நிறுவனம் நடத்திய கருத்து கணிப்பு முடிவுகள் தமிழகத்தில் சரியாக இருந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

READ  அடேங்கப்பா தமிழக முன்னணி பத்திரிகையாளர்களின் சம்பளம் எத்தனை லட்சம் யார் அதிக சம்பளம் பெறுகிறார் என்பது தெரியுமா? அசந்து போவீர்கள் !

வேலூரை பொறுத்தமட்டில் திமுக மற்றும் அதிமுக இரண்டு கட்சிகளுமே கணிசமான வாக்கு வங்கிகளை கொண்டுள்ளனர். குறிப்பாக அதிமுக வேட்பாளர் ஏ சி சண்முகம் முதலியார் சமூகத்தின் வாக்குகளை குறிவைத்தும், திமுகவை பொறுத்தவரை சிறுபான்மை முஸ்லிம்கள் மற்றும் தலித் சமூகத்தினரின் வாக்குகளை குறிவைத்தும் களத்தில் வாக்குகளை சேகரிக்கின்றனர் .

தற்போது வேலூரின் அரசியல் களம் இடைத்தேர்தலை போன்று அமைந்துள்ளது, இங்கு வேலூர் நகர் பகுதியை பொறுத்தவரை அதிமுக வேட்பாளர் சண்முகம் அதிக அளவில் வாக்குகளை பெறுகிறார் என்று ஒ பி சி சர்வே முடிவுகள் சொல்கின்றன. அதே நேரத்தில் திமுகவை பொறுத்த மட்டில் இசுலாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் 90% வாக்குகளை பெரும் என்றும், தற்போது வன்னியர் சமுதாயத்தின் வாக்குகள் பெரும்பாலும் திமுக பக்கமே போகும் வாய்ப்புகள் இருப்பதாக ஒ பி சி கணித்துள்ளது, அதற்கு காரணமாக கூறப்படுவது திமுக வேட்பாளர் சொந்த சமுதாயத்தை சேர்ந்தவர் என்பது மட்டுமல்லாமல்.

READ  ஏலத்திற்கு வருகிறது விஜயகாந்தின் வீடு ! இவரை போய் திமுக பெட்டி வாங்கிவிட்டதாக பிரச்சாரம் செய்ததே !

சென்ற நாடாளுமன்ற பொது தேர்தலில் வன்னியர் வசிக்கும் பகுதியில் திமுக அதிக வாக்குகளை பெற்றதும் இதற்கு ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளது.

மேலும் இறுதியில் வேலூரை பொறுத்தவரை தற்போது திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பக்கமே வெற்றி காற்று விசுவதாகவும் களத்தில் பணத்தை திமுக வாரியிறைத்து வருவதும் இதில் ஒரு காரணியாக ஓபிசி குறிப்பிட்டுள்ளது. அதிமுக வேட்பாளர் சென்ற முறையே பணத்தினை அதிகம் இறைத்துவிட்டதால் இந்தமுறை அவர்களால் திமுகவின் பணவலிமையுடன் ஈடுகொடுக்க முடியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.

திமுகவின் வெற்றிக்கான வாக்கு வித்தியாசம் 30 ஆயிரத்தில் இருந்து 40 ஆயிரம் வரை இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

©TNNEWS24


இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here