ஏலத்திற்கு வருகிறது விஜயகாந்தின் வீடு ! இவரை போய் திமுக பெட்டி வாங்கிவிட்டதாக பிரச்சாரம் செய்ததே !

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு TELEGRAM அல்லது வாட்ஸாபில் ACT FREE என்று அனுப்பவும்

கடன் பாக்கி காரணமாக ஏலத்திற்கு வந்தது கேப்டன் விஜயகாந்தின் வீடு , கல்லூரி உள்ளிட்ட சொத்துகள்.

கேப்டன் விஜயகாந்த் பல திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்று தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியவர்.

அவர் தேமுதிக என்ற கட்சியை உருவாக்கி அதை நடத்தி வரும் நிலையில் அவர் வாங்கிய கடன் மற்றும் வட்டியை திருப்பி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டதால்,

கடன் பாக்கி மற்றும் வட்டி வசூல் நடவடிக்கையாக தேமுதிக தலைவர் விஜயகாந்தின் வீடு மற்றும் கல்லூரியை ஏலத்தில் விட இருப்பதாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி நாளிதழ்களில் விளம்பரம் வெளியிட்டுள்ளது.

Loading...
READ  "ஆப்பரேஷன் நக்ஸலைட்ஸ்" அமித்ஷாவின் அடுத்த அதிரடி

தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு சொந்தமாக சாலிகிராமத்தில் உள்ள வீடு மற்றும் மாமண்டூரில் உள்ள ஆண்டாள் அழகர் கல்லூரி ஆகியவை ஏலத்தில் விட இருப்பதாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் அண்ணா சாலை கிளை இன்றைய நாளிதழ்களில் விளம்பரம் வெளியிட்டுள்ளது.
ரூ.5.52 கோடி கடன் பாக்கியை செலுத்தாததால் அவரது சொத்துக்கள் ஏலம் விட இருப்பதாக வங்கி அறிவித்துள்ளது.

வரும் 26-ம் தேதி இந்த ஏலம் நடக்கும் என்றும் விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. சாலிகிராமத்தில் உள்ள வீட்டின் குறைந்த பட்ச கேட்புத்தொகை ரூ. 3.04 கோடியாக உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளது.

இதனால் தேமுதிக தொண்டர்கள் கடும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர், எங்கள் கேப்டன் பாஜக, அதிமுகவிடம் பணம் வாங்கி விட்டதாக செல்லும் இடங்களில் எல்லாம் திமுகவினர் பிரச்சாரம் செய்தார்கள். உண்மையில் பணம் வாங்கியிருந்தால் அவருடைய சொத்துக்கள் ஏன் ஏலத்திற்கு வரவேண்டும் என்றும் கேள்வி எழுப்புகின்றனர்.

READ  தமிழில் கவிதை எழுதிய பிரதமர் மோடி ! ஸ்டாலினை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்

©TNNEWS24

செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.


இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு TELEGRAM அல்லது வாட்ஸாபில் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here