ஐயா அது நான் இல்லை பல்டி அடித்தார் விஜய்சேதுபதி முட்டு கொடுத்தவர்கள் நிலைமை !

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு TELEGRAM அல்லது வாட்ஸாபில் ACT FREE என்று அனுப்பவும்

சமூகவலைத்தளம்.,

மத்திய அரசையும் மோடியின் திட்டங்களையும் தமிழகத்தில் எதிர்ப்பவர்கள் ஊடகங்கள் மத்தியிலும், எதிர்க்கட்சிகள் மத்தியிலும் மிகவும் பிரபலமடைந்து விடுகிறார்கள், ஒரு கட்டத்தில் இரவு முழுவதும் சிறப்பு விவாதங்கள் நடத்தி யார் பெரியவர் என்ற மோதலையே உண்டாகிவிடுகின்றன ஊடகங்கள்.

அந்த வகையில் ஆஸ்திரேலியாவில் விருது பெரும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விஜய் சேதுபதி காஷ்மீர் மக்கள் முடிவுகளை அவர்கள்தான் தீர்மானிக்கவேண்டும் என்றும் அந்த மக்களுக்குத்தான் அவர்கள் நிலைமை தெரியும் என்று பேசியதுடன், பெரியார் சொன்னார் என்ற கருத்தினை மேற்கோள் காட்டி பேட்டி அளித்தார்.

Loading...

இதற்கு திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக இன்னும் பல இயக்கங்கள் ஆதரவு தெரிவித்தனர், மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் கருத்து 100 % சரியென்று இஸ்லாமிய அமைப்புகள் கொண்டாடி தீர்த்தனர் இந்நிலையில்தான் விஜய் சேதுபதி கூறியதாக இணையத்தில் பல கருத்துக்கள் வலம்வந்தன அதனை திமுக செய்தி தொடர்பாளர்கள், ஊடகவியாளர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் மேற்கோள் காட்டி பேசினர்.

READ  வரும் உள்ளாட்சி தேர்தலில் தனித்து களமிறங்குகிறது பாஜக ஹச் ராஜா பரபரப்பு பேட்டி !

விஜய் சேதுபதி குறிப்பிட்டதுபோல் பாஜக அரசு ஒரு மதத்தின் சார்பாக செயல்படுகிறது, அவர்கள் ஆட்டத்திற்கு அளவில்லாமல் செல்கிறது என்றும் காஷ்மீர் இந்தியாவின் பகுதியே இல்லை என்று பேசினர், இந்நிலையில்தான் ஆங்கில ஊடங்கங்கள் விஜய் சேதுபதி நாட்டிற்கு எதிராக தொடர்ந்து கருத்து தெரிவித்து வருவதாகவும், இதற்கு முன்னர் கேரள ஐயப்பன் கோவிலில் பெண்கள் நுழைந்து தரிசனம் செய்வதை வரவேற்றிருந்தார்.

அப்போது அந்த மக்கள் தீர்மானித்து கொள்வார்கள் என்று எந்த இடத்திலும் இந்து மக்கள் கொள்கை குறித்து விஜய் சேதுபதி சொல்லவில்லை என்று வறுத்தெடுத்தனர்.
இந்நிலையில் பலரும் விஜய் சேதுபதியின் கருத்தை திணித்து கூறுவதாகவும் நான் அவ்வாறு கூறவில்லை என்றும் எனது பெயரில் போலி ஐடி கள் உருவாக்கப்பட்டு நான் சொல்லாத கருத்தினை சொல்லி என்னை சிக்கலில் மாட்டிவிட சிலர் நினைப்பதாகவும் மறுத்துள்ளார்.

READ  பாண்டேவின் அதிரடி முயற்சி வெற்றி பெறுமா? தடைகளை வென்ற நாயகனாக வளர்ச்சி அடைவாரா?

அத்துடன் மத்திய அரசு ஒரு மதத்தினருக்கு ஆதரவாகவோ எதிராகவோ செயல்படுகிறது என்று எங்கும் நான் குறிப்பிடவில்லை என்று மறுத்துள்ளார். ஊடகங்கள் திமுக மற்றும் பெரியாரிஸ்ட்கள் தற்போது விஜய் சேதுபதியின் திடீர் பல்டியால் எந்த பக்கத்தில் முட்டு கொடுப்பது என்று தெரியாமல் முழித்து வருகின்றனர்.

அமிர்கானுடன் இணைந்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் தயாரிக்கும் FOREST GUMP படத்தில் விஜய் சேதுபதி நடிப்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பு – கடந்த ஆண்டு பதிவிட்ட தகவலை மீண்டும் பின் செய்துள்ளார் விஜய் சேதுபதி.

©TNNEWS24


இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு TELEGRAM அல்லது வாட்ஸாபில் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here