சச்சின், ரிக்கி பாண்டிங் ஆகியோரின் மற்றுமொரு சாதனையை முறியடித்தார் கோலி….

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக விராத் கோலி சதம் அடித்ததன் மூலம் 10 ஆண்டுகளில் 20000 ரன்களை அடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இந்த சதத்தின் மூலம் அவரது 43 ஆவது ஒருநாள் சதத்தை பதிவு செய்தார் விராத் கோலி. மேலும் இதுவரை 9 சதங்களை மெற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக அடித்துள்ளார். நேற்றைய போட்டியில் விராத் கோலி மொத்தமாக 114 ரன்கள் எடுத்தார், அவர் இந்த ரன்னை எட்டிய போது குறைந்த ஆண்டுகளில் அதிக ரன்களை அடித்த முதல் வீரர் என்ற சாதனையை தன்வசப்படுத்தினார்.

READ  மன்னிப்பு கேட்டனர் எதனால் கேட்டனர் தெரியுமா? இனி இதே வழியில் தெறிக்கவிடப்போவதாக காவிகள் எச்சரிக்கை?

இதற்கு முன்பு, ஆஸ்திரேலிய ஜாம்பவான் ரிக்கிபாண்டிங்கிடம் இந்த சாதனை இருந்தது ( 10 ஆண்டுகளில் 18 ஆயிரத்து 962 ரன்கள்) தற்போது அதனை முறியடித்து புதிய உலக சாதனையை ( 10 ஆண்டுகளில் 20 ஆயிரத்து 3 ரன்கள்) விராத் கோலி படைத்துள்ளார். கோலியின் இந்த சாதனைக்கு முன்னால் கிரிக்கேட் வீரர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here