இன்று ஸ்டெர்லைடை எதிர்த்து திமுக போராடுவதுபோல் அன்று ஜெயலலிதாவின் மழைநீர் சேகரிப்பு திட்டத்திற்கு எதிராக போராடியது பலன் இப்போதெரியுதா?

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

இன்று ஸ்டெர்லைடை எதிர்த்து திமுக போராடுவதுபோல் அன்று ஜெயலலிதாவின் மழைநீர் சேகரிப்பு திட்டத்திற்கு எதிராக போராடியது பலன் இப்போதெரியுதா?

தமிழகம்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தனது ஆட்சிகாலமான 2003-ம் ஆண்டு அனைவரும் கட்டாயம் மழைநீரை சேகரிக்கவேண்டும் என்ற உத்தரவினை பிறப்பித்தார் மேலும் மழைநீர் சேகரிப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்தாத வீடுகள் மற்றும் தொழில்சாலைகளுக்கு மின்சார இணைப்பினை துண்டித்து விடுவதாகவும் அறிவித்திருந்தார்.

அவர் எதிர்காலத்தில் நிலத்தடி நீருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு 2020 மற்றும் 2025 ஆம் ஆண்டு முழுவதும் நிலத்தடிநீர் காலியாகும் அபாயம் இருப்பதால் இந்த எச்சரிக்கையை அவர் பொதுமக்களின் நலன் கருதி ஏற்பாடு செய்திருந்தார்.

Loading...
READ  வேலூர் தொகுதியில் வெற்றி யாருக்கு தமிழக முடிவுகளை சரியாக சொன்ன ஒரே நிறுவனத்தின் கருத்து கணிப்பு வெளியீடு

ஆனால் அப்போதைய திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இது மக்களை பாதிக்கும் செயல் ஜெயலலிதாவின் சர்வாதிகார போக்கை இது காட்டுவதாக கூறி போராட்டத்தை அறிவித்து இறுதியில் மழை நீர் சேகரிப்பு திட்டத்தையே நீர்த்துப்போக செய்தனர்.

அதன் எதிரொலிதான் இன்று தமிழகம் முழுவதும் குடி நீர் பஞ்சம் ஏற்பட்டு பொதுமக்கள் காலி குடங்களுடன் அலைவதாக கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார். அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு மழைநீர் சேகரிப்பு திட்டம் பற்றி ஆலோசனை வழங்கியவர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அன்று மழை நீர் சேகரிப்பு திட்டத்தை சர்வாதிகாரம் என்று திசை திருப்பியதன் பயன் இன்று குடிக்க தண்ணீர் இல்லாமல் தமிழகம் முழுவதும் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். இதே போல் ஸ்டெர்லைட் மற்றும் அரசாங்கத்தின் முடிவுகளை எதிர்த்து போராட்டத்தை தூண்டிவிட்டு சில காலம் கழித்து தமிழர்களுக்கு எதிர்காலமே இல்லாமல் செய்வதையே இங்குள்ள சில அமைப்புகள் செயல்படுவது மக்களுக்கு தெரியும் காலம் வெகு தொலைவில் இல்லை.

READ  நடிகர் பிரகாஷ்ராஜ் க்கு எச்சரிக்கை விடுத்த நீதிமன்றம்....

இனியாவது வீடு தோறும் மழைநீரை சேமிப்போம் ! ஒவ்வொரு போராட்டத்தையும் ஆராய்ந்து முடிவெடுப்போம்.

வாசுகி கிருஷ்ணா.
TNNEWS24.

©TNNEWS24

செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.


இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here