அடுத்த உலகக்கோப்பையை எந்த நாடு நடத்துகிறது தெரியுமா ?

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

நேற்று நடந்து முடிந்த 2019 – ம் ஆண்டிற்கான கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் ஒரு புதிய சாம்பியனாக இங்கிலாந்து மாறியுள்ளது , கிரிக்கெட் விளையாட்டை அறிமுகம் செய்த இங்கிலாந்து அணி உலகக்கோப்பையை வெல்வது இதுவே முதல் முறை.

இந்த ஆண்டு உலகக்கோப்பை தொடர் இங்கிலாந்தில் நடைபெற்றது, இதற்கு முன்னர் நடந்த 2015 -ம் ஆண்டு உலகக்கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது.

அப்போது ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்றது அதற்கு முன்னர் 2011-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்றபோது இந்திய அணி கோப்பையை வென்றது.

இந்நிலையில் அடுத்து 2023 ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடர் நடைபெறவுள்ளது அந்த தொடரை இந்தியா நடத்தவுள்ளது.

ஆம் நாம் தான் அடுத்த உலகக்கோப்பையை நடத்த உள்ளோம் இந்த முடிவு கடந்த 2013 ஆம் ஆண்டு லண்டனில் நடந்த ஐசிசி கூட்டத்தில் எடுக்கப்பட்டது !

READ  என்னது, டோக்யோ ஒலிம்பிக்கின் டிக்கெட் விலை இத்தனை லட்சமா...?

2023 -ல் நடைபெறும் உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டி மும்பை வான்கடே , அல்லது கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.

கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 3 முறை உலகக்கோப்பை தொடரை நடத்தும் அணியே வெற்றிபெறும் சுழலில் அடுத்த முறை இந்தியாவிற்கு சாதகமான சூழல் உருவாகுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

©TNNEWS24

செய்திகளை உங்களது whatsapp எண்ணில் இலவசமாக உடனுக்குடன் பெற இங்கு கிளிக் செய்யவும்.

Loading...

இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here