பாமக சார்பில் மாநிலங்களவைக்கு செல்வது யார் தகவல் வெளியானது.

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு TELEGRAM அல்லது வாட்ஸாபில் ACT FREE என்று அனுப்பவும்

சென்னை.,

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக இணைந்து போட்டியிட்டது இதனால் பெரிய அளவில் நாடாளுமன்றத்தில் இந்த கூட்டணியால் வெற்றியை பதிவு செய்யமுடியவில்லை.

இருப்பினும் தற்போதைய ஆட்சி நீடிப்பதற்கு பாமகவின் வாக்கு வங்கி இடைத்தேர்தலில் வட மாவட்டங்களில் அதிமுகவிற்கு கிடைத்ததே அதன் வெற்றிக்கு காரணமாக அமைந்தது என்ற தகவல் வெளியானது.

தொடக்கத்தில் பாமக கூட்டணியால் அதிமுகவிற்கு பெரிய அளவில் லாபம் இல்லை என்றும் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை பாமாவிற்கு வழங்க கூடாது என்று எடப்பாடி தரப்பினர் அழுத்தம் கொடுத்தனர்.

Loading...

ஆனால் கூட்டணியை முன்னின்று அமிர்த்த கே பி முனுசாமி இந்த தகவலை பன்னீர் செல்வத்திடம் எடுத்து செல்ல கூட்டணி ஒப்பந்த படி நடந்து கொள்வதே எதிர்காலத்தில் கட்சிக்கு நன்மை பயக்கும் மேலும் பாமக கூட்டணியை நான் தேவை என கருதுவதாகவும் எடுத்து சொல்ல எடப்பாடி தரப்பினர் சமாதானம் ஆயிருக்கிறார்கள்.

READ  சேலத்தில் அடிவாங்கியதே போதும் மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டார் பியூஸ் முட்டு கொடுத்தவர்கள் அதிர்ச்சி !

அதனை தொடர்ந்து கே பி முனுசாமி இந்த தகவலை பாமக தலைமையிடம் கூறியிருக்கிறார். இதனால் வருகிற மாநிலங்களவை உறுப்பினர் பதவியில் அன்புமணி டெல்லி செல்ல பாமக தீர்மானித்திருக்கிறது. இருப்பினும் சில தகவல்கள் அன்புமணிக்கு பதில் அவரது மனைவி மாநிலங்களவைக்கு செல்வார் என்று பலரும் கருத்துக்களை தெரிவித்து வந்த நிலையில் அன்புமணி செல்வதே சரியாக இருக்கும் என்று ராமதாஸ் கூறியிருக்கிறார்.

© THEDAILYTAMIL

செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.


இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு TELEGRAM அல்லது வாட்ஸாபில் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here