#BIGBREAKINGNEWS சிலை கடத்தல் வழக்கில் 2 அமைச்சர்களுக்கு தொடர்பு பொன்மாணிக்கவேல். யார் அந்த இரண்டு அமைச்சர்கள்?

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

சென்னை.,

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ ஜி பொன்மாணிக்கவேல் இன்று உயர்நீதிமன்றத்தில் தெரிவித்த தகவல் தமிழக மக்கள் மற்றும் இந்து மதத்தை பின்பற்றும் சமூகத்தினர் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆம் தமிழகத்தில் என்று சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு ஐ ஜி- யாக பொன்மாணிக்கவேல் நியமிக்கப்பட்டாரோ அன்றில் இருந்து இன்றுவரை அதிமுக திமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் மற்றும் பல முக்கிய புள்ளிகளை எதிர்த்து திருட்டு போன முக்கிய கடவுள் சிலைகளை மீட்டு வந்தார்.

தமிழ் மன்னர் இராஜராஜசோழன் சிலைகளையும் மீட்டு வந்து ஒவ்வொரு தமிழர்கள் மனதிலும் பொன்மாணிக்கவேல் இடம்பெற்றிருந்தார். ஆனால் இதுவரை பொன்மாணிக்கவேல் எந்த அரசியல் கட்சியையும், குறிப்பிட்ட அமைச்சர்களையும் குற்றம் சாட்டவில்லை.

Loading...
READ  நடிகையுடன் வாரிசு தலைவரின் வீடியோ சிக்கினார் அரசியல் வாரிசு ! பிரபல நடிகை

ஆனால் இன்று உயர்நீதிமன்றத்தில் பொன்மாணிக்கவேல் தெரிவித்த தகவல் அரசியல் களத்தை தாண்டி கடவுள் நம்பிக்கை கொண்ட ஒவ்வொருவர் மனதிலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிலை கடத்தல் மற்றும் சிலைகளை வெளிநாடுகளுக்கு கடத்துதல் ஆகியவற்றில் தமிழகத்தை சேர்ந்த இரண்டு முக்கிய அமைச்சர்களுக்கு தொடர்பு இருப்பதாக கூறியுள்ளார். இதனை வெறுமனே சொல்லாமல் தனது விசாரணை அறிக்கையும் தாக்கல் செய்துள்ளார், இதற்கு முன்னர் பொன்மாணிக்கவேல் சிலை கடத்தல் பிரிவில் தொடர கூடாது என ஆளும் கட்சி தொடர்ந்து முயற்சித்து வந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அடுத்த அமர்வில் சிலை கடத்தலில் தொடர்புடைய இரண்டு அமைச்சர்களின் பெயரை பொன்மாணிக்கவேல் வெளியிடுவார் என்று தகவல் தெரிவிக்கின்றனர்

தமிழகத்தில் தற்போது மிக பெரிய குற்றச்சாட்டினை பொன்மாணிக்கவேல் வைத்துள்ள நிலையில் எதிர்க்கட்சியான திமுக இதுகுறித்து தற்போதுவரை வாய் திறக்கவில்லை என்பது பலரையும் சந்தேகத்தில் ஆழ்த்தியுள்ளது. தேசிய ஊடகங்கள் பொன்மாணிக்கவேல் தகவலை முக்கிய செய்தியாக வெளியிட்டு வருகின்ற நிலையில் தற்போது தமிழகத்தை சேர்ந்த ஊடகங்கள் அமைதிகாத்துவருகின்றனர்.

READ  இன்னும் இரண்டு நாட்களில் விக்ரம் லேண்டரின் ஆயுட்காலம் முடிவடைகிறது

இதற்கிடையில் பொன்மாணிக்கவேல் அவர்கள் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் அவர் தன்னை பாதுகாத்துக்கொள்வார் என்ற நம்பிக்கை இருப்பினும் அவருக்கு தேவையான பாதுகாப்பினை நீதிமன்றமும், மத்திய அரசும் உறுதி செய்யவேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.

பொன்மாணிக்கவேல் அவர்களுக்கு சமூகவலைத்தளங்களில் இளைஞர்கள் ஆதரவு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

©TNNEWS24

செய்திகளை உங்களது whatsapp எண்ணில் இலவசமாக உடனுக்குடன் பெற இங்கு கிளிக் செய்யவும்.


இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here