எந்த அணி உலக கோப்பையை வெல்லும் சுந்தர் பிச்சை சொன்னது அப்படியே நடக்குதே !

0

லண்டன்.,

கூகுள் நிறுவனத்தின் CEO சுந்தர்பிச்சை விளையாட்டு போட்டிகளில் கிரிக்கெட் மீது தனி ஆர்வம் கொண்டவர், இந்தியாவை சேர்ந்தவர் என்பதாலும் அவருக்கு கூடுதல் ஆர்வம் கிரிக்கெட் போட்டிகளின் மீது இருப்பதாக அவரே சொல்லி இருக்கிறார்.

Loading...

இந்நிலையில் உலகக்கோப்பை போட்டிகள் தொடங்கிய போது சுந்தர் பிச்சை தனது கணிப்பினை கூறினார் அதில் எந்த அணி உலககோப்பையை வெல்லும் என்றும் தனது கணிப்பினை தெரிவித்தார் அவர் என்ன குறிப்பிட்டாரோ இதுவரை அது அப்படியே நடந்துவருகிறது.

உலக கோப்பை கிரிக்கெட்டை பொறுத்தவரை தற்போது அனைத்து அணிகளுமே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் இங்கிலாந்து, இந்தியா ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெரும் என்றும்,

READ  பிரசாந்த் கிஷோரிடம் சரணடைந்த மம்தா 500 கோடி பேரம் ! இரும்பு பெண்மணிக்கா இந்த நிலைமை

அதில் இங்கிலாந்து மற்றும் இந்தியா ஆகிய இரு அணிகள் உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் மோதும் என்றும் அதில் இந்தியா வெற்றிபெற அதிகவாய்ப்புகள் இருப்பதாகவும் சுந்தர் கணித்திருந்தார்.

தற்போது அவர் கணித்தது போலவே இதுவரை அரையிறுதி ஆட்டங்களும் நடக்கின்றன அதன்படி சுந்தர் பிச்சை கணித்தது போன்று இந்திய அணி உலககோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்கள் இடையே ஏற்பட்டுள்ளது.

©TNNEWS24

செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here