புரட்டாசி மாதத்தில் ஏன் திருமணம், வீடுகுடிபுகுதல் உள்ளிட்ட காரியத்தை செய்யக்கூடாது? என்னவெல்லாம் புரட்டாசியில் செய்யலாம் தெரிந்து கொள்ளுங்கள்?

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு TELEGRAM அல்லது வாட்ஸாபில் ACT FREE என்று அனுப்பவும்

புரட்டாசி மாதத்தில் ஏன் திருமணம், வீடுகுடிபுகுதல் உள்ளிட்ட காரியத்தை செய்யக்கூடாது? என்னவெல்லாம் புரட்டாசியில் செய்யலாம் தெரிந்து கொள்ளுங்கள்?

புரட்டாசி மாதம் என்பது தெய்வீக வழிபாட்டிற்கு மிகவும் உரிய மாதம். இந்த மாதத்தில் ஏன் திருமணம் செய்வதில்லை என்று பலர் கேள்வி எழுப்புகின்றனர் இந்துக்கள் தவிர பிற மதத்தினர் திருமணம் செய்கின்றனர்.

ஆனால் இந்து குடும்பத்தினர் புரட்டாசியில் திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்கள் செய்வதில்லை. பொதுவாக எந்த சுபகாரியங்களையும் வைகாசி மற்றும் கார்த்திகை மாதத்தில் செய்யலாம் என்பது இந்துமதத்தின் ஐதீகம், அது தடையின்றி மங்களகரமாக நடைபெறும் என்று காலம் காலமாக இந்துக்கள் நம்புகின்றனர் .

ஆடி, புரட்டாசி, மார்கழி ஆகிய மாதங்களில் சுபகாரியங்கள் செய்யக்கூடாது என்றும் காலம் காலமாக பின்பற்றி வருகின்றனர்.

Loading...
READ  யார் "பரதேசி" விவாதத்தில் அடித்துக்கொண்ட நாம் தமிழர், காங்கிரஸ் இந்திய அளவில் வீடியோ வைரல் சந்தி சிரித்த மானம் !

புரட்டாசியில் வீடு கட்ட வாஸ்து செய்யக்கூடாது ஏன் என்றால் வாஸ்து பகவான் இந்த மாதத்தில் உறங்கிக்கொண்டிருப்பார். அவர் சில மாதங்கள் மட்டுமே விழித்திருப்பார் என்றும் அந்த மாதத்தில் வாஸ்து பூஜை செய்தால் மட்டுமே தடைகள் இன்றி வீடு கட்ட முடியும் என்றும் ஆன்மீக பெரியோர்கள் கூறுகின்றனர். மேலும் இந்த மாதத்தில் வீடு பால்காய்ச்சி குடி போகக்கூடாது என்றும் அது வாடகை வீடாக இருந்தாலும் வீடு குடிபோகக் கூடாது என்றும் குறிப்பிடுகின்றனர்.

மேலும் கர்ப்பிணி பெண்களுக்கு ஒற்றைப்படை மாதமாக புரட்டாசி வரும் பட்சத்தில் மட்டுமே வளைகாப்பு நடத்தலாம் என்றும் அது ஒருநாள் பண்டிகை என்பதால் முடிந்து விடும்.

அதேபோல புரட்டாசி மாதம் பிறந்தவர்களுக்கு அறுபதாம் கல்யாணம், எண்பதாம் திருமணம் இதனால் பாதிப்பு எதுவும் வருவதில்லை என்றும் கூறுகின்றனர், இந்த மாதம் செப்டம்பர் 25 மற்றும் 26 மட்டுமே நல்ல நாட்கள் உள்ளது அவசியமானால் வளைகாப்பு உள்ளிட்ட சில சுபகாரியங்களை மட்டும் செய்யலாம். இந்த மாதம் திருமணம், சாந்தி முகூர்த்தத்திற்கு நல்ல நாட்கள் இல்லை என்றும் குறிப்பிடுகின்றனர்.

READ  நான் கையில் வைத்திருந்த கருவி இதுதான் பலரின் தொடர் கேள்விக்கு மோடி விளக்கம் !

ஏன் புரட்டாசி மாதத்தில் பள்ளியில் சேர்க்கின்றனர்?

புரட்டாசி மாதத்தில் நவராத்திரி பண்டிகை நாளின் கடைசி நாளான விஜய தசமியன்று கல்வி கற்றுக்கொள்ளத் தொடங்கினால் நல்ல கல்வியறிவு கிடைக்கும் என்பதும் ஐதீகம் வ அதேபோல விஜயதசமியன்று குழந்தைகளுக்கு புதிய விசயங்களை கற்றுக்கொடுக்க தொடங்கலாம் விளையாட்டு, பொதுஅறிவு புதிய தொழில் தொடங்கலாம் என்றால் மேன்மேலும் வளரும் என்றும் அதனால்தான் விஜயதசமியில் குழந்தைகளை பள்ளியில் சேர்க்கின்றனர்.

சித்திரை, வைகாசி, ஆவணி, தை, பங்குனி ஆகிய மாதங்களில் திருமணம் செய்யலாம். இந்த மாதத்தில் திருமணம் செய்தால் மணமக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள் குழந்தை பாக்கியம் நன்றாக அமையும் என்றும்,

வீடு கட்ட ஏற்ற மாதங்கள்

சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை, தை, மாசி ஆகிய மாதங்களில் வீடு கட்டும் வேலையைத் தொடங்கினால் தடையில்லாமல் விரைவாக முடியும். சித்திரை, வைகாசி, ஆனி ஆகிய மாதங்களில் கிணறு வெட்டினால் அது என்றும் வற்றாது. ஆனி, ஆடி, புரட்டாசி, மார்கழி, பங்குனி ஆகிய மாதங்களில் வீடு வாங்கவும் கூடாது. வீடு குடியேறவும் கூடாது என்று முன்னோர்கள் வகுத்துக் கொடுத்துள்ளனர். முன்னோர்களின் வழியை பின்பற்றினால் நமக்கு தொந்தரவு இல்லைதானே.

READ  சுதந்திரத்தினவிழாவில் பிரதமர் மோடியின் அடுத்த அதிரடி ! நிறைவேற்றப்படுகிறது புதிய சட்டம் இது வேற லெவல்.

இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு TELEGRAM அல்லது வாட்ஸாபில் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here