பாண்டே தனது தாடியை எடுக்க கூடிய நேரம் வந்துவிட்டது !

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

தமிழ் செய்தி தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளின் மூலம் மிகவும் பிரபலமானவர் ரங்கராஜ் பாண்டே ! இவரது நிகழ்ச்சிகள் அனைத்தையும் தமிழகமக்கள் அதிகம் விரும்பி பார்த்ததன் விளைவாக இவர் தலைமை செய்தியாசிரியராக பணியாற்றிய செய்தி நிறுவனம் முன்னணி ஊடகமாக திகழ்ந்தது.

கேள்வி கேட்பதற்கு பலரும் தயங்கிய நிலையில் பாண்டே தெளிவாக தனது கேள்விகளின் மூலம் பலரையும் திக்குமுக்காட வைத்துள்ளார். இதில் அமமுக துணை பொதுச்செயலாளர் தினகரனுக்கும் பாண்டேவிற்கும் இடையில் நேரலையில் வார்த்தை யுத்தமே நடைபெற்றது.

மேலும் திராவிட கழக தலைவர் வீரமணி பாண்டேவின் விவாதத்திற்கு பிறகு சிறிது நாட்கள் எந்த செய்தி தொலைக்காட்சிக்கும் பேட்டி கொடுப்பதையே தவிர்த்துவிட்டார்.

READ  பெண்களுக்கு இலவசம் அறிவித்த கெஜ்ரிவால் வெளுத்து வாங்கிய பானுகோம்ஸ்.

ஆனால் காலப்போக்கில் முக்கிய அரசியல் கட்சி தலைவர் ஒருவரின் தலையீட்டின் பெயரில் பாண்டேவிற்கு நிர்வாகத்தில் அழுத்தம் கொடுக்கப்பட்டதன் காரணமாக அவர் தனியார் தொலைக்காட்சியில் இருந்து விலகியதுடன் சிறிது நாட்களுக்கு பிறகு சாணக்யா என்ற ஆன்லைன் ஊடகத்தை தொடங்கி நடத்தி வருகிறார்.

Loading...

தற்போது சாணக்யா வெற்றி நடை போட்டு வருகிறது. இதற்கிடையில் யார் தனது பணிக்குஇடையூறு கொடுத்தார்களோ அவர்களது முன்பே தன்னுடைய திறமையை நிரூபித்து முன்னேறுவது ஒன்றுதான் பாண்டேவின் ஒரே நோக்கமாக இருந்தது. அத்துடன் தனக்கென தனி சொந்தமான சாட்லைட் செய்தி நிறுவனத்தை தொடங்கவேண்டும் என்றும்,

அதுவரை தனது தாடியை எடுக்கமாட்டேன் என்று பாண்டே கூறிவந்த நிலையில் தற்போது பாண்டே வேந்தர் தொலைக்காட்சியின் முழு பொறுப்பையும் சாணக்யா நிர்வாகமே ஏற்று நடத்தி வருகிறது.

READ  இலங்கை விருந்தில் குடித்து விட்டு தகராறு செய்த பெண் அரசியல்வாதி வீடியோ வெளியானதால் கலக்கத்தில் கட்சியினர்.

தற்போது வேந்தர் தொலைக்காட்சியை முழுவதும் வாங்கி அதன் பெயரை சாணக்யா என்று மாற்றும் நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறதாம் சரியாக இன்னும் ஒரு மாதத்திற்குள் முழு பணிகளும் முடிவடைந்து சாணக்யா முழு நேர செய்தி தொலைக்காட்சியாக வெளிவர இருக்கிறது.

எனவே தனது நீண்ட நாள் உழைப்பு நிறைவேறியுள்ளதால் பாண்டே தனது தாடியினை ஷேவ் செய்து கொள்ளவேண்டிய நேரம் வந்துவிட்டதாக நெருங்கி வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

©TNNEWS24

செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.


இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here