இதற்காகத்தான் சூர்யா கெட்ட வார்த்தையில் விமர்ச்சித்தாரா? வெளுத்து வாங்கும் பாஜகவினர் !

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

சென்னை.,

சூர்யா குடும்பத்தினர் அகரம் பவுண்டேசன் எனும் அமைப்பின் மூலம் மாணவர்களுக்கு கல்வி சேவை நடத்தி வருகின்றனர். இதற்கான நிகழ்ச்சி ஒன்று நடிகர் சூர்யா தலைமையில் சிறப்பு அழைப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

இதில் சூர்யா பேசிய பேச்சு பாஜகவினர் மற்றும் இந்து அமைப்புகள் இடையே எரிச்சலை உண்டு பண்ணியுள்ளது. நீட் தேர்வு, மும்மொழிக்கொள்கை போன்றவற்றை என்ன மயிருக்கு நடைமுறை படுத்துகிறீர்கள் என்று கெட்ட வார்த்தையில் பேசினார்.

குறிப்பாக நாடு முழுவதும் பலர் இது போன்ற நுழைவு தேர்வுகளால் பாதிக்கப்படுவதாக கூறினார். ஆனால் தற்போது நடிகர் சூர்யாவிற்கு கல்வியாளர்கள் மற்றும் பாஜகவினர் கடுமையான பதிலடியினை கொடுத்துள்ளனர். அதில் சூர்யா சார்பில் நடத்தப்படும் கல்வி நிறுவனங்கள் நாமக்கல் பகுதியில் உள்ளன.

Loading...
READ  மூன்று நாடுகள் பங்கேற்கும் கடற்படை ஒத்திகை தொடங்கியது !

நாமக்கல் மாவட்டம் நீட் தேர்வு வருவதற்கு முன்பு கொடிகட்டி பறந்தது அதாவது மருத்துவருக்கு படிக்க வேண்டும் என்றால் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குறிப்பிட்ட பள்ளிகளில் பல லட்சம் செலவு செய்து 11 மற்றும் 12 ம் வகுப்புகளில் சேர்த்து விடுவர். அங்குள்ள பள்ளிகளும் 11 ம் வகுப்பு தேர்விற்கு மாணவர்களை தயார் படுத்தாமல் 12 – ம் வகுப்பு பொது தேர்விற்கு நேரடியாக மாணவர்களை தயார் படுத்தி வந்தனர்.

இதனால் அங்கு படிக்கும் மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்று மருத்துவராக எளிதில் தேர்வாகின இதனால் அந்த பள்ளிகள் பல லட்சம் பெற்றுக்கொண்டு மாணவர்களை தங்கள் பள்ளிகளில் சேர்த்துக்கொண்டு பல கோடிகளை சம்பாரித்து வந்தன.

இதுபோன்ற பள்ளிகள் நடிகர் சூர்யா உறவினர்களுக்கு சொந்தமாக நாமக்கல் மாவட்டத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது நீட் தேர்வு இருப்பதால் பள்ளிகள் மதிப்பெண்கள் எடுத்தும் பயனில்லை என்பதால் சூர்யா மட்டுமின்றி அவரது தந்தை சிவக்குமார் உள்ளிட்டவர்கள் கூட மத்திய அரசை விமர்ச்சித்து வந்தனர்.

READ  இப்போ தெரியுதா ஸ்டாலினால் சட்டையை கிழித்து கொண்டு தெருவில் தான் ஓடமுடியும் பங்கம் செய்த அன்புமணி !

தற்போது சூர்யா தரக்குறைவாக விமர்சனம் செய்ததால் அவரை கடுமையாக பாஜகவினர் வெளுத்து வாங்கி வருகின்றனர். நீட் தேர்வு வந்ததால் பொருளாதாரத்தில் பின் தங்கிய வசதி படைத்தவர்கள் ஆட்டோ டிரைவர் மகன் உள்ளிட்டோர் தேர்வானது உங்கள் கண்களுக்கு தெரியவில்லையா? எவ்வளவு பணம் இருந்தாலும் ஏன் மருத்துவ கல்லூரி முதல்வர் மகளாக இருந்தாலும் நீட் தேர்வு தேர்ச்சி பெற்றால் மட்டுமே மருத்துவம் படிக்க முடியும்.

உங்களது தொழில் நஷ்டமடைவதால் மத்திய அரசை குறை சொல்லவேண்டாம், முதலில் இந்த நடிப்பை படத்தில் காட்டுங்கள் உங்களது மனைவி, தந்தை என யார் விமர்சனம் செய்தாலும் உண்மையை மறைக்க முடியாது என்றும் சமூக வலைத்தளங்களில் வெளுத்து வாங்கி வருகின்றனர்.

டிமானிடேசன், நீட் தேர்வு போன்றவை பொதுமக்களை பாதித்ததோ இல்லையோ நடிகர்களை அதிகம் பாதித்துள்ளது போல?

READ  இனி இந்தியா குறித்து விமர்ச்சித்தால் இந்தியாவில் இடமில்லை ஆட்டத்தை தொடங்கியது பாஜக …

©TNNEWS24

செய்திகளை உங்களது whatsapp எண்ணில் இலவசமாக உடனுக்குடன் பெற இங்கு கிளிக் செய்யவும்.


இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here