கம்யூனிஸ்ட் கட்சியினர் அராஜகம் கைது செய்யப்படுவார்களா? வீடியோ வெளியான நிலையிலும் மூடி மறைக்கும் தமிழக ஊடகங்கள்

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

கம்யூனிஸ்ட் கட்சியினர் அராஜகம் கைது செய்யப்படுவார்களா? மூடி மறைக்கும் தமிழக ஊடகங்கள்

கேரளா.,

கேரள மாநிலத்தில் திருச்சூரில் வேலைக்கு சென்ற பெண்ணை தரதரவென இழுத்துவந்து வெளியில் வைத்து கடுமையாக தாக்கிய கம்யூனிஸ்ட் கட்சியினரை கண்டித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

கேரள மாநிலத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகளால் அறிவிக்க பட்ட பந்த் அன்று திருச்சூர் முத்தூட் நிறுவனத்தில் பணிபுரியும் ஸ்ரீலேகா வழக்கம் போல் கடைக்கு சென்று தனது வேலையை தொடங்கினார், அப்போது கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த லெனின், குணசேகரன், ஜேம்ஸ் ஆகியோர் ஸ்ரீலேகாவை கடையை சாத்துமாறும் இல்லை என்றால் நடப்பது வேறு என்றும் எச்சரித்துள்ளனர், ஆனால் ஸ்ரீலேகா தனக்கு முக்கியமான பணிகள் இருப்பதாகவும் தான் வேலை செய்தால் மட்டுமே அதனை சரி செய்யமுடியும் என்று கூறி தனது பணியை தொடங்கினார்.

Loading...
READ  திருப்பதி ஏழுமலையானை தரிசித்துவிட்டு அப்துல்கலாம் சொல்லிய வார்த்தைகள். மத நல்லிணக்கத்தை கற்றுக்கொள்ளுங்கள் பெரியாரிஸ்ட்களே !

அப்போது உள்ளே வந்த ஜேம்ஸ் ( இடதுபுறம் ) ஸ்ரீலேகாவை தரக்குறைவாக பேசியதுடன் சற்றும் எதிர்பாராத விதமாக உள்ளே சென்று இழுத்து வெளியில் போட்டு கதவை சாத்தினார் அத்துடன் கேமரா இல்லாத பக்கத்தில் ஸ்ரீலேகாவை இழுத்து சென்று கடுமையாக தாக்கி அடித்துள்ளனர்.

இதில் பாதிக்கப்பட்ட ஸ்ரீலேகா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார். இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த குண்டர்களை கைது செய்யவேண்டும் என்று போராட்டத்தில் இறங்கியுள்ளனர், அவர்களுக்கு ஆதரவாக கல்லூரி மாணவர்களும் இறங்கியுள்ளதால் கேரள மாநிலத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த வாரம் சென்னை காமராஜர் கலைஅரங்கத்தில் நடைபெற மதநல்லிணக்க மாநாட்டில் பேசிய கம்யூனிஸ்ட் கட்சியின் அருணன், இந்தியாவில் பசுவின் பெயரால் கலவரம் செய்பவர்களை கைது செய்வதற்கு பதில் பாசிசத்தை ஊட்டி வளர்க்கும் மோடி, அமிட்ஷாவை கைது செய்யவேண்டும் ஏன் என்றால் அவர்கள்தான் இவை அனைத்திற்கும் காரணம் என்றார்.

READ  சிக்கிமிலும் ஆட்சியை பிடிக்கிறது பாஜக...10 எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணைந்தனர்.

இதன் அடிப்படையில் ட்விட்டரில் அருணனிடம் ஸ்ரீலேகா தாக்கப்பட்ட விடியோவை மேற்கோள்காட்டி ப்ரிதிவிராஜன் என்ற நபர், நாட்டில் பாசிசம் பாசிசம் என்று சொல்லுவியே அருணா, இதற்கு பெயர் என்ன பெண்ணை தாக்குவதற்கு பெயர்தான் வீரமா? ஏன் இதெல்லாம் உன் கண்ணுக்கு தெரியாதா? என்று கேள்வி எழுப்பியதுடன் பிரதமரை கைது செய்ய சொன்னதுபோல் இப்போது தாக்கிய நபர்களுக்காக உன்னை கைது செய்யலாமா என்று கடுமையான பாணியில் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு பதில் சொல்லமுடியாத அருணன் அவரை பிளாக் செய்துள்ளதாகவும் ப்ரித்திவி ராஜன் குறிப்பிட்டுள்ளார்.

விமானத்திற்குள் கோசம் போட்ட சோபியா என்ற பெண்ணை தமிழிசை கைது செய்யவேண்டும் என்று காவல்நிலையத்தில் புகார் அளித்த போது தனி மனித சுதந்திரம் இல்லை என்று மிக பெரிய அளவில் ஊடகங்களில் பேசிய யாரும் பெண் தாக்கப்பட்டதை ஏன் கண்டிக்கவில்லை என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மேலும் அண்டை மாநிலத்தில் பெண்ணிற்கு நேர்ந்த கொடுமையை ஊடகங்கள் வெளியில் சொல்லாமல் மூடி மறைத்து வருவதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளது.

READ  இந்தியாவா இல்லை பாகிஸ்தானா சிவன் கோவிலை நாசம் செய்தவர்களை கைது செய்யக்கோரி இந்தியா முழுவதும் வலுக்கும் போராட்டம் !

©TNNEWS24


இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here