பதற்றமான சூழலிலும், காஷ்மீரை சேர்ந்த இரு பெண் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் சிறப்பாக செயல்பட்டனர்…தலைவர்கள் பாராட்டு.

0
இது போன்ற செய்திகளை உங்களது வாட்ஸாப்பில் உடனடியாக பெற 9962862140 என்ற எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் அனுப்பவும்

இந்திய – பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின்னர், பாகிஸ்தான், காஷ்மீரை ஆக்கிரமிக்க தொடங்கியதை அடுத்து, அங்கு ஆண்ட மன்னர் ஹரிசிங், இந்திய அரசுடன் காஷ்மீரை இணைக்க ஒப்புக்கொண்டு கையெழுத்திட்டார். 1956-ம் ஆண்டு ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது.

சிறப்பு அந்தஸ்த்து காரணமாக வெளியுறவு, பாதுகாப்பு உள்ளிட்ட சில முக்கிய துறைகள் தவிர்த்து, மற்ற துறைகளில் இந்திய நாடாளுமன்றத்தில் இயற்றப்படும் சட்டங்கள், காஷ்மீரின் சட்டப்பேரவையில் ஒப்புதல் பெற்ற பின்னரே, அங்கு அமலாகும்.

வெளி மாநிலத்தவர்கள் அங்கு நிலம் வாங்க முடியாது. மற்ற மாநிலங்களில் சட்டப்பேரவையின் பதவிக்காலம் 5 ஆண்டுகளாக உள்ள நிலையில், அங்குமட்டும் அது 6 ஆண்டுகளாக உள்ளது.

READ  அடடா இவளோ நாள் இது தெரியாம போச்சே ? ஜோதிடர் பாலாஜியையும் விட்டுவைக்காத கனிமொழி !

இந்நிலையில், ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்த்தை திரும்பப் பெற்றுக்கொள்வதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார். இதற்கு, குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.

மேலும், ஜம்மு காஷ்மீர் பகுதி இரண்டாக பிரிக்கப்படுகிறது. லடாக் பகுதி சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாகவும் (லட்சத்தீவுகள், அந்தமான் போன்று), ஜம்மு காஷ்மீர் பகுதி சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும் (புதுச்சேரி, டெல்லி போல) மாற்றப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதற்கு 4 நாட்களுக்கு முன்பு ஸ்ரீநகரில் தகவல்தொடர்பு இயக்குனராக ஐஏஎஸ் அதிகாரியான சயித் செஹ்ரிஸ் அஸ்கர் என்பவர் நியமிக்கப்பட்டார்.

மருத்துவராக இருந்து ஐஏஎஸ் அதிகாரியான இவர், ஸ்ரீநகரை சேர்ந்தவர்கள் தொலைதூரத்தில் உள்ள தங்களது உறவினர்களுடன் பொதுதொலைபேசிகள் மூலம் தொடர்புகொள்ள உதவி செய்துள்ளார். தொலைபேசி, இணையதள சேவைகள் ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில், அஸ்கர் செய்த உதவி பொதுமக்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருந்தது.

READ  தேசத்தை காட்டி கொடுத்திருக்கிறார் ex துணை குடியரசு தலைவர் அன்சாரி ஆதாரத்துடன் பிரதமர் மோடியிடம் உளவு அமைப்பினர் மனு? நாடு கடந்த இந்தியர்கள் எச்சரிக்கை.

இதேபோல், சண்டிகரை சேர்ந்த பெண் ஐபிஎஸ் அதிகாரியான நித்யா என்பவர் ஸ்ரீநகரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். தால் ஏரி, ஆளுநர் மாளிகை, முக்கிய தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த இடங்களின் பாதுகாப்பை இவர் கையாண்டார். சவாலான நேரத்தில் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகளான அஸ்கர், நித்யா ஆகியோருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here