WWE யில் நடுவரை தாக்கிய பெண்ணுக்கு எவ்வளவு அபராதம் தெரியுமா.

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு TELEGRAM அல்லது வாட்ஸாபில் ACT FREE என்று அனுப்பவும்

ரெஸ்லிங் என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது WWE தான். இது வருமானம் பெற கூடிய தொழிலாக நடத்தப்படுகிறது . அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டுள்ள தனியார் ஊடகம் ஒன்று இந்நிகழ்ச்சியை உலகம் முழுவதும் ஒளிபரப்பி வருகிறது.

இந்நிலையில், போட்டியில் பங்கேற்ற பெண் ஒருவர், நாற்காலியை கொண்டு நடுவரை தாக்கியதால் அவருக்கு 10,000 டாலர் அபராதமாக விதிக்கப்பட்டது. இது இந்திய மதிப்பில் சுமார் 7 லட்சம் .கடந்த ஞாயிறு அன்று பெண்களுக்கான மல்யுத்தம் சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்பட்டது. இதில், தி மேன் என்று அனைவராலும் அழைக்கப்படும் “பெக்கி லிஞ்ச்” பங்கேற்றார். இவரை எதிர்த்து “சாஷா” சண்டையிட்டு வந்தார்.

READ  மக்களே உஷார் தமிழகத்தில் வேகமாக பரவி வருகிறது டெங்கு காய்ச்சல்

சண்டையிடும் நபர்கள், கையில் கிடைக்கும் பொருள்களை எல்லாம் தூக்கி அடிப்பார்கள். போட்டியின் நடுவில் பெக்கி லிஞ்ச்சும் நாற்காலியை வைத்து தாக்க முயலும் போது சாஷா விலகினார் இதில், எதிர்பாராத விதமாக போட்டியின் நடுவர் தாக்கப்பட்டதால், பெக்கி லிஞ்ச்சுகு 10,000 அமெரிக்க டாலர் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. மேலும், போட்டியில் இருந்து பெக்கி லிஞ்ச் நீக்கப்பட்டு, சாஷா வெற்றியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் . இந்த தகவல், WWE யின் அதிகார பூர்வ ட்வீட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading...

இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு TELEGRAM அல்லது வாட்ஸாபில் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here