இதற்காகத்தான் யோகியை உத்திரபிரதேசத்தின் முதல்வராக தேர்ந்தெடுத்தோம் அமிட்ஷா தெளிவான விளக்கம் !

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு TELEGRAM அல்லது வாட்ஸாபில் ACT FREE என்று அனுப்பவும்

லக்னோ.,

பாஜக தேசியத்தலைவரும் இந்திய உள்துறை அமைச்சருமான அமிட்ஷா இன்று உத்திரபிரதேச மாநிலத்தில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றினார் அப்போது ஏன் யோகி ஆதித்யநாத்தை உ. பி யின் முதல்வராக தேர்ந்தெடுத்தோம் என்ற விளக்கத்தினை அளித்தார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக மிகப்பெரிய வெற்றிப் பெற்றது. மாநிலத்தில் மொத்தம் உள்ள 403 இடங்களில் 325 தொகுதிகளை பாஜக வென்றது. இதனையடுத்து பாஜக சார்பில் யாரை முதலமைச்சராக தேர்ந்தெடுப்பார்கள் என்ற பரப்பரப்பு இந்தியா முழுவதும் ஏற்பட்டது.

Loading...
READ  வன்னியர்களுக்கு சிறப்பு அறிவிப்பை வெளியிட்ட ஸ்டாலின் ஆட்சி அமைந்ததும் முதலில் இதைத்தான் செய்ய போறாராம் !

உத்தரப்பிரதேச மாநிலத்தின் முன்னணியில் இருந்த பாஜக தலைவர்களின் பெயர்கள் பேசப்பட்டு வந்தது . எனினும் இறுதியில் அப்போது கோரக்பூர் கோயிலின் தலைமை மடாதிபதி மற்றும் மக்களவை உறுப்பினருமான யோகி ஆதித்யநாத் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார்.

இன்று பேசிய அமிட்ஷா ஏன் யோகியை முதல்வராக தேர்ந்தெடுத்தோம் என்று விளக்கமளித்துள்ளார். அதில், “யோகி ஆதித்யநாத் முதலமைச்சர் ஆவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. அவரை தேர்வு செய்தப் போது சிலர் என்னிடம் யோகி ஒரு உள்ளாட்சியை கூட நிர்வாகித்தது இல்லையே அவரை ஏன் முதலமைச்சர் பதவிக்கு தேர்வு செய்கிறீர்கள் எனக் கேட்டனர்.

அது சரிதான் அவருக்கு ஆட்சி நிர்வாகத்தில் முன் அனுபவம் இல்லை. ஆனால் பாஜகவை பொறுத்தவரை நாங்கள் திறமையாக பணியாற்ற அர்ப்பணிப்புடைய நபரை தேர்வு செய்ய நினைத்தோம். ஆகவே தான் நாங்கள் யோகி ஆதித்யநாத்திற்கு முதல்வர் பதவியளித்தோம்.

READ  மேற்கு வங்கத்தில் ஆட்சி கலைக்கப்பட இருப்பதாக தகவல் - அமிட்ஷா விரைகிறார்

நாங்கள் எடுத்த முடிவு சரியானது. அந்த முடிவு சரியாகும்படி யோகி ஆதித்யநாத் தற்போது சிறப்பான ஆட்சியை செய்து வருகிறார் என அமிட்ஷா தெரிவித்தார். பாஜகவை பொறுத்தவரை உயர் பதவியில் அமர கட்சிக்கும் நாட்டிற்கும் உண்மையாக உழைத்தாலே பதவி நம்மை தேடிவரும் என்று குறிப்பிட்டார்

©TNNEWS24

இது போன்ற செய்திகளை உங்களது வாட்சப் எண்ணில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் அனுப்பவும்


இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு TELEGRAM அல்லது வாட்ஸாபில் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here