கோவையில் முஸ்லீம் இளம்பெண்ணின் ஆண் நண்பர்களை மதம் மாற வற்புறுத்திய இருவர் கைது

0

கோவையில் முஸ்லீம் இளம்பெண்ணின் ஆண் நண்பர்களை மதம் மாற வற்புறுத்தி அடித்து உதைத்த இருவரை போலீசார் கைது செய்தனர்.கோவை கரும்புக்கடை, அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் நிஷா வயது 20 .( பாதுகாப்பு காரணங்களுக்காக பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் அதே பகுதியில் தனது தாய் மற்றும் சகோதரியுடன் வசித்து வருகிறார்.

நிஷா கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பு படித்து முடித்துள்ளார். இந்நிலையில் மாற்று சான்றிதழ் வாங்குவதற்காக கல்லூரிக்கு சென்றுவிட்டு, தனது ஆண் நண்பருடன் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். வீட்டினருகே நிஷா தனது நண்பருடன் வந்த இரு சக்கர வாகனத்தில் வந்த போது தடுத்து நிறுத்திய இருவர் , நீ இஸ்லாம் மதத்தை சேர்ந்த பெண், இப்படி ஆண் நண்பர்களுடன் வாகனத்தில் வருவது சரியா ? தவறா ? என கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது. நிஷாவை வழி மறித்து இருவர் மிரட்டுவதை பார்த்து அவரது அம்மாவும் அந்த இடத்திற்கு வந்துள்ளார்.

Loading...
READ  பிரசாந்த் கிஷோரிடம் சரணடைந்த மம்தா 500 கோடி பேரம் ! இரும்பு பெண்மணிக்கா இந்த நிலைமை

அப்போது இரு நபர்களும், இஸ்லாம் முறைப்படி உன் மகளுக்கு நூறு கசையடி வழங்க வேண்டும் என மிரட்டி, அவர்களின் பெல்ட்டை கழட்டி கொடுத்து அடிக்கக் கூறியதாக தெரிகிறது. பயந்து போன அவர் தனது மகளை பெல்ட்டால் நூறு முறை அடித்ததாக தெரிகிறது. நிஷாவை போகச்சொல்லிவிட்டு அவரது ஆண் நண்பர்களை கரும்புக் கடையிலுள்ள ஒரு கடையில் அடைத்து வைத்து , மதம் மாறக்கூறி ஐந்து மணி நேரம் அடித்து உதைத்துள்ளனர். கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததோடு, பீளமேட்டிலுள்ள அவரது பெற்றோர்களுக்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.பிரச்சனை வேறு திசையில் செல்வதை உணர்ந்த நிஷாவின், அம்மாவும் அவரது குடும்பத்தினரும் பயந்துபோய் நிஷா படித்த கல்லூரியில் உள்ள ஹாஸ்டலில் இரண்டு நாள் தங்கியுள்ளதாக தெரிகிறது.

READ  நேரலையில் விடியோவை காட்டி அசிங்கப்படுத்திய எழுத்தாளர் ! பொய் சொன்ன பிரசன்னா சிக்கிய பரிதாபம் !

இதனையடுத்து பாதுகாப்புக்காக கோவை மாநகர காவல்துறை கண்காணிப்பாளர் சுமித்சரன் அவர்களை சந்தித்து புகார் மனு அளித்துள்ளனர்.கோவை மாநகர காவல்துறை ஆணையரின் உத்திரவின் பேரில் , வழக்கு பதிவு செய்த குனியமுத்தூர் காவல் துறையினர் கரும்புக்கடை பகுதியில் வசிக்கும் அலி என்பவரது மகன் ஷபியுள்ளா, மற்றும் கோவை குனியமுத்தூர், குறிஞ்சி நகர் பகுதியை சேர்ந்த சுலைமான் என்பவரின் மகன் இப்ராஹிம், ஆகிய இருவரையும் கைது செய்து நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளார்கள்.

இஸ்லாமியர்கள் இந்துக்கள் ஒற்றுமையாக இருக்க காவல் துறை அனைத்து சமுதாய மக்களிடம் நல்லூறவை ஏற்படுத்தும் வண்ணம் கூட்டங்கள் நடத்தி வரும் நிலையில் நடைபெற்ற இச்சம்பவம் இருதரப்பினரிடமும் பதட்டத்தை உருவாக்கி இருக்கிறது.

ஹிந்து பெண்களை இவர்கள் காதலித்து ஊர் சுற்றி மதமாற்றம் செய்வதை
ஹிந்துக்கள் எச்சரிக்கையாகி ஒன்றுபட்டு எதிர்க்காமல் விட்டால் நாளைக்கு ஹிந்துக்களின் நிலை கேள்விக்குறிதான் என்று இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்

READ  மக்களவையில் முதல் கேள்வியிலேயே அசிங்கப்பட்ட கனிமொழி ! விளாசி எடுத்த பியூஸ் கோயல் !

செய்திகளை உங்களது whatsapp எண்ணில் இலவசமாக உடனுக்குடன் பெற இங்கு கிளிக் செய்யவும்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here