Apple Watch for kids
ஆப்பிள் நிறுவனத்தின் குழந்தைகளுக்கான வாட்ச் சேவை இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. Apple Watch SE, Apple Watch 4 மற்றும் அதற்கு மேற்பட்ட மாடல்களில் இந்த சேவை செயல்படும். இதன் மூலம் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் தொடர்பில் இருக்க முடியும், அவர்களின் இருப்பிடத்தை அறிந்து கொள்ளலாம், மற்றும் அவர்களின் உடல்நலம் மற்றும் உடற்பயிற்சி தரவுகளை கண்காணிக்க முடியும்.
முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள், இந்தியாவில் குழந்தைகளுக்கான வாட்ச் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் எளிதான அழைப்பு, செய்தி அனுப்புதல் மற்றும் செயல்பாடு கண்காணிப்பு உள்ளிட்ட வசதிகள் உள்ளன. குழந்தைகளுக்கு தனித்தனியாக ஐபோன் இல்லாமலும் இந்த வாட்ச் செயல்படும் என்று ஆப்பிள் தெரிவித்துள்ளது. குழந்தைகளுக்கு மொபைல் போன் கொடுக்க விரும்பாத பெற்றோருக்கு இந்த சேவை பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
ஆப்பிள் நிறுவனம், “Apple Watch For Your Kids இந்தியாவில் கிடைக்கிறது. இது Apple Watch Series 4 அல்லது அதற்கு மேற்பட்ட மாடல்கள் அல்லது Apple Watch SE இன் செல்லுலார் மாடல்களில் செயல்படும். இதற்கு iPhone 8 அல்லது அதற்கு மேற்பட்ட மாடல்களில் சமீபத்திய watchOS மற்றும் iOS இயங்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளது.
சல்மான்கான் வீட்டின் முன் துப்பாக்கிச்சூடு https://tnnews24.com/2024/07/25/salman-khan-firing-case-shooters-told-to-scare-bhai-smoke-to-appear-fearless-on-cctv/
“இது குழந்தைகள் மற்றும் ஐபோன் இல்லாத மற்ற குடும்ப உறுப்பினர்களுக்கு ஆப்பிள் வாட்சின் தொடர்பு, உடல்நலம், உடற்பயிற்சி மற்றும் பாதுகாப்பு அம்சங்களை வழங்குகிறது” என்று நிறுவனம் மேலும் கூறியுள்ளது.
இந்த புதிய அம்சத்துடன், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் இருப்பிடத்தை அறிந்து கொள்ள முடியும், அதே நேரத்தில் அனைத்து தனிப்பட்ட தரவுகளும் பாதுகாப்படும். பெற்றோர்கள் மேலும் அனைத்து தொடர்புகளையும் அங்கீகரிக்க முடியும், இதனால் குழந்தைகள் ஆப்பிள் வாட்சின் தொடர்பு அம்சங்களை பாதுகாப்பாக பயன்படுத்த முடியும்.
“Apple Watch For Your Kids ஐ பயன்படுத்தும் குழந்தைகளுக்கு தனித்தனியாக செல்லுலார் திட்டத்தின் மூலம் தனித்தனியாக போன் எண் இருக்கும், மேலும் அவர்களுடைய சொந்த ஆப்பிள் ID ஐப் பயன்படுத்தலாம்” என்று ஆப்பிள் கூறியது. செல்லுலார் சேவைக்கு ஆப்பிள் வாட்சிற்கான வயர்லெஸ் சேவை திட்டம் தேவைப்படும் என்றும், தற்போது இந்தியாவில் ஜியோ மூலம் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளது. குழந்தைகள் காலண்டர் அம்சத்தைப் பயன்படுத்தி அட்டவணைகள் மற்றும் குடும்ப நிகழ்வுகளைப் பின்பற்றலாம், நினைவூட்டல்களுடன் பணிகளை நிர்வகிக்க கற்றுக்கொள்ளலாம் மற்றும் பெற்றோர்கள் ஐபோனிலிருந்து புகைப்படங்களைப் பார்க்கலாம்.
நேயர்களே, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவியது. இறுதியாக,…
தென்னாப்பிரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் ஜி-20 நாடுகள் மாநாட்டில், இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் ஆற்றிய உரை…
காசா பகுதியில் தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. காசாவின் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே…
அன்பார்ந்த நேயர்களே, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து, இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி…
கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து உயர்ந்துவந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. இந்த விலை வீழ்ச்சி, தங்கம்…
"திருமா எனது நண்பர்" நயினார் நாகேந்திரன் பேட்டி! திருமாவளவன் ஒரு கூட்டணிகுள் இருக்கும் வரை கூட்டணிக்கு வருவாரா என நாம்…