மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மறைந்த பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி டெல்லி இல்லத்துக்கு நேரில் சென்று அவர் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறினார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாட்கள் அரசு முறைப் பயணமாக சென்னையில் இருந்து டெல்லிக்கு நேற்று மாலை புறப்பட்டு இரவு டெல்லி சென்றடைந்தார்.
டெல்லியில் உள்ள திமுக எம்பிக்கள், கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர். தொடர்ந்து இன்று காலை பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.
தமிழ்நாட்டிற்கு நிலுவையில் உள்ள நிதி, சமக்ர சிக்சா திட்டத்துக்கு நிதி உள்ளிட்டவற்றை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று கூறி அதற்கான கோரிக்கை மனு அளித்தார்.
மூன்று முக்கிய கோரிக்கைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லியில் காங். மூத்த தலைவர் சோனியா காந்தியை சந்தித்து பேசினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மறைந்த பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி இல்லத்துக்கு நேரில் சென்று அவர் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறினார்.
சீதாராம் யெச்சூரி உருவப்படத்துக்கு மலர்தூவி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
நேயர்களே, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவியது. இறுதியாக,…
தென்னாப்பிரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் ஜி-20 நாடுகள் மாநாட்டில், இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் ஆற்றிய உரை…
காசா பகுதியில் தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. காசாவின் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே…
அன்பார்ந்த நேயர்களே, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து, இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி…
கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து உயர்ந்துவந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. இந்த விலை வீழ்ச்சி, தங்கம்…
"திருமா எனது நண்பர்" நயினார் நாகேந்திரன் பேட்டி! திருமாவளவன் ஒரு கூட்டணிகுள் இருக்கும் வரை கூட்டணிக்கு வருவாரா என நாம்…