Connect with us

india

டெல்லியில் சீதாராம் யெச்சூரி இல்லத்திற்கு சென்று மு.க.ஸ்டாலின் நேரில் ஆறுதல்!

Published

on

டெல்லியில் சீதாராம் யெச்சூரி இல்லத்திற்கு சென்று மு.க.ஸ்டாலின் நேரில் ஆறுதல்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மறைந்த பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி டெல்லி இல்லத்துக்கு நேரில் சென்று அவர் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாட்கள் அரசு முறைப் பயணமாக சென்னையில் இருந்து டெல்லிக்கு நேற்று மாலை புறப்பட்டு இரவு டெல்லி சென்றடைந்தார்.

டெல்லியில் உள்ள திமுக எம்பிக்கள், கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர். தொடர்ந்து இன்று காலை பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.

தமிழ்நாட்டிற்கு நிலுவையில் உள்ள நிதி, சமக்ர சிக்சா திட்டத்துக்கு நிதி உள்ளிட்டவற்றை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று கூறி அதற்கான கோரிக்கை மனு அளித்தார்.

மூன்று முக்கிய கோரிக்கைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லியில் காங். மூத்த தலைவர் சோனியா காந்தியை சந்தித்து பேசினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மறைந்த பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி இல்லத்துக்கு நேரில் சென்று அவர் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறினார்.

சீதாராம் யெச்சூரி உருவப்படத்துக்கு மலர்தூவி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

india

எந்த மொழியும் திணிக்கப்பட மாட்டாது – சு.வெங்கடேசனின் கேள்விக்கு மத்திய அரசு பதில்!

Published

on

By

எந்த மொழியும் திணிக்கப்பட மாட்டாது - சு.வெங்கடேசனின் கேள்விக்கு மத்திய அரசு பதில்!

எந்த மொழியும் திணிக்கப்பட மாட்டாது – சு.வெங்கடேசனின் கேள்விக்கு மத்திய அரசு பதில்!

தேசிய கல்விக் கொள்கையின் மூலம் இந்தி திணிப்பை மத்திய அரசு மேற்கொண்டு மொழிக் கொள்கையை மீறுகிறதா? என மிழ்நாட்டிற்கு சமக்ர சிக்சா அபியான் திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய ரூ.2,154 கோடி என எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார்.

8ம் வகுப்பு மற்றும் அதற்கு மேற்பட்ட படிப்புகளில் தாய்மொழி, உள்ளூர் மொழி மற்றும் பிராந்திய மொழி என்பதன் கீழ் செயல்படுத்தி வருவதாகவும்,

தமிழக பள்ளிகளில் தமிழ் ஒரு மொழி பாடமாக இருப்பதை மத்திய அரசு ஆதரிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

2024-2025 நிதியாண்டுக்கான 4305.66 கோடி ரூபாய் வழங்க திட்ட ஒப்புதல் வாரியத்தால் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

எந்த மாநிலத்திலும் எந்த மொழியும் திணிக்கப்படாது என்பதையும் மத்திய கல்வி இணை அமைச்சர் எழுத்துப்பூர்வ பதிலில் தெரிவித்துள்ளார்

 

Continue Reading

india

மீண்டும் பூமிக்கு திரும்புகிறார் சுனிதா வில்லியம்ஸ் – நாசா அறிவிப்பு!

Published

on

By

மீண்டும் பூமிக்கு திரும்புகிறார் சுனிதா வில்லியம்ஸ் - நாசா அறிவிப்பு!

மீண்டும் பூமிக்கு திரும்புகிறார் சுனிதா வில்லியம்ஸ் – நாசா அறிவிப்பு!

சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கித் தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் நாளை மார்ச் 18 பூமிக்கு திரும்புவர் என்று நாசா அறிவித்துள்ளது.

நேற்று அதிகாலை சர்வதேச விண்வெளி மையத்தில் வெற்றிகரமாக இணைந்த ஸ்பேஸ்எக்ஸ் க்ரூ டிராகன் விண்கலத்தில் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோருடன் மற்றொரு அமெரிக்க விண்வெளி வீரர், ரஷிய விண்வெளி வீரர் ஆகியோரும் பூமிக்கு திரும்பவுள்ளனர்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்ற நிலையில், இந்திய நேரப்படி மார்ச் 19-ம் தேதி அதிகாலை 3.27 மணி) ஃபுளோரிடா கடற்பகுதி அருகே தரையிறங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Continue Reading

india

உக்ரைன் – ரஷியா போர் நிறுத்தம்!

Published

on

By

உக்ரைன் – ரஷியா போர் நிறுத்தம்!

உக்ரைன் – ரஷியா போர் நிறுத்தம்!

சுமார் 3 ஆண்டாக நீடித்து வரும் உக்ரைன்-ரஷியா இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வரஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தீவிரம் காட்டி வருகின்றார்.

சவுதி அரேபியாவில் அமெரிக்கா மற்றும் உக்ரைன் பிரதிநிதிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் 30 நாட்கள் தற்காலிக போர்நிறுத்தம் கொண்டு வரும் முடிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ரஷிய அதிபர் புதின் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியிடம் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.

உக்ரைனுடனான போர் நிறுத்தத்துக்கு அதிபர் புதின் நிபந்தனைகளுடன் கூடிய சம்மதம் தெரிவித்தார்.

போர் நிறுத்தம் தொடர்பான உக்ரைனின் திட்டத்தை மதிப்பிடுவதற்கு முன், உக்ரைனில் ஏற்பட்ட மோதலை தீர்ப்பதில் இவ்வளவு கவனம் செலுத்தியதற்காக அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். சீன அதிபர், இந்திய பிரதமர், பிரேசில் அதிபர் மற்றும் தென்னாப்பிரிக்க அதிபர் ஆகியோர் இந்த பிரச்சனையில் அதிக கவனம் செலுத்துகிறார்கள். அவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என ரஷிய அதிபர் புதின் தெரிவித்தார்.

Continue Reading

Trending