நெல்லை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுவிக்கப்பட்டதால் நடத்திய சோதனையில் புரளி என தெரியவந்தது.
மருத்துவமனையின் முன்னாள் ஊழியர் மிரட்டல் விடுத்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
நெல்லை சந்திப்பு பகுதியில் அரவிந்த தனியார் கண் மருத்துவமனை தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் பரபரப்புடன் இயங்கும்.
செவிலியர் ஆறுமுகம் என்பவருக்கு மர்ம நபர் ஒருவர் போன் செய்து உங்கள் மருத்துவமனையில் வெடிகுண்டு வைத்துள்ளதாகவும், இன்னும் சிறிது நேரத்தில் அது வெடித்து சிதறும் என செல்போனில் கூறியுள்ளார்.
மருத்துவமனை நிர்வாகம் நெல்லை மாநகர காவல் துறை ஆணையரிடம் இது சம்பந்தமாக தகவல் தெரிவித்துள்ளனர்.
மருத்துவமனையின் ஆறு தளங்களையும் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாயைக் கொண்டு ஒவ்வொரு தளத்திற்கும் நேரடியாக சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
செவிலியரை செல்போனில் தொடர்பு கொண்டவர் கோயம்புத்தூரை சேர்ந்த மகேஷ் என்ற நபர் என்பது தெரியவந்துள்ளது.
கோயம்புத்தூரில் உள்ள அரவிந்த் கண் மருத்துவமனையின் முன்னாள் கேன்டீன் ஊழியர் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
போலீசார் மகேஷை பிடித்து விசாரிக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பு
நேயர்களே, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவியது. இறுதியாக,…
தென்னாப்பிரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் ஜி-20 நாடுகள் மாநாட்டில், இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் ஆற்றிய உரை…
காசா பகுதியில் தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. காசாவின் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே…
அன்பார்ந்த நேயர்களே, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து, இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி…
கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து உயர்ந்துவந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. இந்த விலை வீழ்ச்சி, தங்கம்…
"திருமா எனது நண்பர்" நயினார் நாகேந்திரன் பேட்டி! திருமாவளவன் ஒரு கூட்டணிகுள் இருக்கும் வரை கூட்டணிக்கு வருவாரா என நாம்…