திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி திருவிழாவின் 3-ஆம் நாள் யாகசாலை பூஜைகள் இன்று (நவ.4) கோலாகலமாக நடைபெற்றது.
முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் 2-ஆம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது.
இந்தக் கோயிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஒன்றான புகழ்பெற்ற கந்த சஷ்டி திருவிழா நேற்று முன் தினம் (நவ.2) காலை 7 மணியளவில் யாகசாலை பூஜையுடன் கோலாகலமாக தொடங்கியது.
இதனையடுத்து, தமிழ்நாடு மட்டுமல்லாமல் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் கடலில் புனித நீராடி பச்சை நிற உடை அணிந்து நேற்று முதல் விரதம் இருக்கத் தொடங்கினர்.
தொடர்ந்து, 7 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவின் 3ம் நாளான இன்று அதிகாலை 3 மணியளவில் கோயில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தீபாராதனையும், உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது.
பின்னர், நடைபெற்ற யாகசலையில் பூர்ணாகுதி நடைபெற்று தீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து, சுவாமி ஜெயந்திநாதர்க்கு பால், பழம், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு வகையான சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
இதில் விரதம் இருக்கக்கூடிய ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வரும் 7-ந் தேதி நடைபெறுகிறது.
நேயர்களே, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவியது. இறுதியாக,…
தென்னாப்பிரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் ஜி-20 நாடுகள் மாநாட்டில், இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் ஆற்றிய உரை…
காசா பகுதியில் தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. காசாவின் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே…
அன்பார்ந்த நேயர்களே, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து, இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி…
கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து உயர்ந்துவந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. இந்த விலை வீழ்ச்சி, தங்கம்…
"திருமா எனது நண்பர்" நயினார் நாகேந்திரன் பேட்டி! திருமாவளவன் ஒரு கூட்டணிகுள் இருக்கும் வரை கூட்டணிக்கு வருவாரா என நாம்…