தொலைதூர இலக்குகளை தாக்கும் ஹைபர்சோனிக் ஏவுகணையை ஒடிசா கடற்கரையில் வெற்றிகரமாக சோதனை செய்தது.
உள்நாட்டு தொழில்நுட்பத்தில் டிஆர்டிஓ பல வகையான ஏவுகணைகளை தயாரித்து வருகிறது.
முப்படைகளிலும் சேர்க்கப்பட்டு வருகின்றன.
1,500 கி.மீ அப்பால் உள்ள தூரத்தை தாக்கும் ஹைபர் சோனிக் ஏவுகணையை டிஆர்டிஓ ஹைதராபாத்தில் உள்ள டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் ஏவுகணை மையத்தில் உருவாக்கியது.
டிஆர்டிஓ.,வின் இதர ஆய்வகங்களும் இணைந்து செயல்பட்டன.
டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் தீவில் நேற்று முன்தினம் சோதித்து பார்க்கப்பட்டது.
மூத்த விஞ்ஞானிகள் முன்னிலையில் இந்த சோதனை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.
பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்து
தனது ட்விட்டர் விடுத்துள்ள செய்தியில்,
தொலைதூர ஹைபர்சோனிக் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதன் மூலம் இந்தியா முக்கிய சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் நவீன ராணுவ தொழில்நுட்பங்கைளை வைத்திருக்கும் ஒரு சில நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது. இது வரலாற்று சிறப்புமிக்க தருணம். இந்த மகத்தான சாதனையை படைத்த டிஆர்டிஓ குழுவினருக்கும், பாதுகாப்பு படைகளுக்கும் பாராட்டுக்குள்’’ என குறிப்பிட்டுள்ளார்.
நேயர்களே, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவியது. இறுதியாக,…
தென்னாப்பிரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் ஜி-20 நாடுகள் மாநாட்டில், இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் ஆற்றிய உரை…
காசா பகுதியில் தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. காசாவின் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே…
அன்பார்ந்த நேயர்களே, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து, இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி…
கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து உயர்ந்துவந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. இந்த விலை வீழ்ச்சி, தங்கம்…
"திருமா எனது நண்பர்" நயினார் நாகேந்திரன் பேட்டி! திருமாவளவன் ஒரு கூட்டணிகுள் இருக்கும் வரை கூட்டணிக்கு வருவாரா என நாம்…