பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தாது என மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.
விஸ்வகர்மா திட்டம் சாதி அடிப்படையிலான தொழில் முறையை வலுப்படுத்துவதாகவும், தற்போதைய வடிவில் அதனை செயல்படுத்திட இயலாது எனவும், தமிழ்நாட்டிலுள்ள கைவினைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் விரிவான திட்டம் ஒன்றினை உருவாக்கிட தமிழ்நாடு அரசு முடிவு செய்திருப்பதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் ஜிதன் ராம் மஞ்சிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
“பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் சாதி அடிப்படையிலான தொழில் முறையை வெளிப்படுத்துகிறது.
விஸ்வகர்மா திட்டத்தை தற்போது தமிழ்நாடு அரசு செயல்படுத்தாது.
திட்டத்தை ஆராய தமிழ்நாடு அரசின் சார்பில் குழு அமைக்கப்பட்டு, விரிவான ஆய்வு செய்யப்பட்டது.
திட்டத்தில் மாற்றம் செய்திட மத்திய அரசுக்கு பரிந்துரைத்து, அதனை பிரதமரின் கவனத்திற்கு கொண்டு அதற்க்கு மத்திய அரசு அளித்த பதிலில் பரிந்துரைக்கப்பட்ட திருத்தங்கள் குறிப்பிடப்படவில்லை
தமிழ்நாட்டுக்கென விரிவான திட்டம் ஒன்றை உருவாக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
“சமூக நீதி அடிப்படையில் சாதி பாகுபாடு இல்லாமல்’ கலைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் புது திட்டத்தை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நேயர்களே, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவியது. இறுதியாக,…
தென்னாப்பிரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் ஜி-20 நாடுகள் மாநாட்டில், இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் ஆற்றிய உரை…
காசா பகுதியில் தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. காசாவின் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே…
அன்பார்ந்த நேயர்களே, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து, இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி…
கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து உயர்ந்துவந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. இந்த விலை வீழ்ச்சி, தங்கம்…
"திருமா எனது நண்பர்" நயினார் நாகேந்திரன் பேட்டி! திருமாவளவன் ஒரு கூட்டணிகுள் இருக்கும் வரை கூட்டணிக்கு வருவாரா என நாம்…