உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரின் மூன்றாவது சுற்றில் இந்தியாவின் குகேஷ் சீனாவின் டிங் லிரெனை வீழ்த்தினார்.
இந்தியாவின் செஸ் கிராண்ட்மாஸ்டர் குகேஷ் சீனாவின் டிங் லிரென் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நேற்று முன்தினம் தொடங்கியது.
14 சுற்றுகளை கொண்ட இந்த தொடரில் முதலில் யார் 7.5 புள்ளிகளை எடுக்கிறார்களோ அவரே உலக சாம்பியனாக அறிவிக்கப்படுவார்.
முதலாவது சுற்றில் சீன வீரர் டிங் லிரன் வெற்றி பெற்றார்.
2வது சுற்று ஆட்டம் டிராவில் முடிந்தது.
3ஆவது சுற்றில் குகேஷ் வெள்ளை நிற காய்களுடனும், லிரென் கருப்பு நிறத்துடனும் விளையாடினார். போட்டியில் 37ஆவது நகர்த்தலில் குகேஷ் வெற்றி பெற்றார்.
குகேஷ், டிங் லிரென் இருவரும் 1.5 1.5 புள்ளிகள் என சமநிலையில் உள்ளார்கள்.
18 வயதான குகேஷ் அந்த சாதனையை படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மிகக் குறைந்த வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற வீரர் என்ற சிறப்பையும் குகேஷ் பெறுவார்.
நேயர்களே, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவியது. இறுதியாக,…
தென்னாப்பிரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் ஜி-20 நாடுகள் மாநாட்டில், இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் ஆற்றிய உரை…
காசா பகுதியில் தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. காசாவின் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே…
அன்பார்ந்த நேயர்களே, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து, இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி…
கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து உயர்ந்துவந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. இந்த விலை வீழ்ச்சி, தங்கம்…
"திருமா எனது நண்பர்" நயினார் நாகேந்திரன் பேட்டி! திருமாவளவன் ஒரு கூட்டணிகுள் இருக்கும் வரை கூட்டணிக்கு வருவாரா என நாம்…