india

புதுச்சேரியில் ஜன.1 முதல் ஹெல்மெட் அணிவது கட்டாயம்!

புதுச்சேரியில் ஜன.1 முதல் ஹெல்மெட் அணிவது கட்டாயம்!

ஜனவரி 1ம் தேதி முதல் புதுச்சேரியில் ஹெல்மெட் அணியாவிட்டால் ரூ. 1000 அபராதம் விதிக்கப்படும் என போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த 2017ம் ஆண்டு இரு சக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என அறிவிக்கப்பட்டது.

மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து கட்டாய ஹெல்மெட் திட்டம் வாபஸ் பெறப்பட்டது.

இரு சக்கர வாகன ஓட்டிகள் 2025 ஜனவரி 1 ம் தேதி முதல் ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்று போக்குவரத்து போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.

போக்குவரத்து காவல்துறை முதுநிலை காவல் கண்காணிப்பாளர் பிரவீன்குமார் திரிபாதி சுற்றறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார்.

புதுச்சேயில் கடந்த சில ஆண்டுகளில் இரு சக்கர வாகனங்கள் உள்பட பல்வேறு வாகனங்களின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்து உள்ளது.

மிஷன் ஜீரோ பேட்டலிட்டி திட்டத்தின் கீழ் வரும் ஜனவரி 1ம் தேதி முதல் ஹெல்மெட் பயன்பாட்டை கட்டாயமாக்குவதை தொடங்கவுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 1ம் தேதி முதல் மோட்டார் வாகன சட்டப்படி ரூ.1000 அபராதம் மற்றும் 3 மாதத்துக்கு ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்யும் நடவடிக்கையில் இருந்து தப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து ஆலோசனை நடத்திய போது ஹெல்மெட் சட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது தொடர்பாக முதலமைச்சர் சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

admin

Recent Posts

பிக் பாஸ் கேமிக்கு பாய் பாய்

நேயர்களே, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவியது. இறுதியாக,…

5 months ago

ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடி உரை

தென்னாப்பிரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் ஜி-20 நாடுகள் மாநாட்டில், இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் ஆற்றிய உரை…

5 months ago

காசாவில் அல்-ஜசிரா பத்திரிகையாளர்கள் ஐந்து பேர் பலி

காசா பகுதியில் தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. காசாவின் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே…

8 months ago

தேர்தல் ஆணையம் நீதிமன்றம் அல்ல ப.சிதம்பரம் கருத்து

அன்பார்ந்த நேயர்களே, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து, இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி…

8 months ago

தங்கம் விலை அதிரடி சரிவு சவரனுக்கு ₹560 குறைவு

கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து உயர்ந்துவந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. இந்த விலை வீழ்ச்சி, தங்கம்…

8 months ago

“திருமா எனது நண்பர்” நயினார் நாகேந்திரன் பேட்டி!

"திருமா எனது நண்பர்" நயினார் நாகேந்திரன் பேட்டி! திருமாவளவன் ஒரு கூட்டணிகுள் இருக்கும் வரை கூட்டணிக்கு வருவாரா என நாம்…

9 months ago