india

சீனாவில் பரவும் புதிய வைரஸ் – முன்னெச்சரிக்கை கடைப்பிடிக்க மத்திய அரசு அறிவுறுத்தல்!

சீனாவில் பரவும் புதிய வைரஸ் – முன்னெச்சரிக்கை கடைப்பிடிக்க மத்திய அரசு அறிவுறுத்தல்!

கடந்த 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பேரழிவை ஏற்படுத்தியது.

லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்

இதன் தாக்கம் சற்று குறைந்திருந்தாலும் முழுமையாக நீங்கவில்லை.

சீனாவில் புதிதாக ஒரு வைரஸ் வேகமாக பரவி வருவதாக வெளியாகியிருக்கும் தகவல் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஹியூமன் மெடப்னியுமோவைரஸ் என்று பெயரிடப்பட்டுள்ள புதிய வைரஸை சுருக்கமாக ஹெச்.எம்.பி.வி என அழைக்கப்படுகிறது.

தற்போது அதிக அளவில் பரவி வருகிறது. இந்த வைரஸ் தொற்றினால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளது.

சீனாவில் உள்ள மருத்துமனைகளில் ஏராளமான நோயாளிகள் அனுமதிக்கப்ட்டுள்ளதாகவும், உயிரிழப்பு அதிகரித்துள்ளதன் காரணமாக மயானங்களில் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் சமூக வலைதளங்களில் வீடியோ வைரலாகியுள்ளன.

எச்.எம்.பி.வி. தொற்று பரவி உள்ளதா என்பது குறித்து மத்திய சுகாதாரப் பணிகள் தலைமை இயக்குநர் அதுல் கோயல் விளக்கம் அளித்துள்ளார்.

எச்.எம்.பி.வி. தொற்று என்பது சாதாரண சளியை ஏற்படுத்தும் பிற வைரஸ் போன்றதே. இது இளம்வயதினர் மற்றும் முதியோருக்கு காய்ச்சல், தொண்டை வலி, உடல்வலி போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தக் கூடும்.

இந்தியாவில் பருவகால புளூ காய்ச்சல் பாதிப்புகளை தொடர்ந்து உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம்.

மத்திய அரசு மருத்துவமனைகளில் போதிய மருந்துகள் மற்றும் படுக்கை வசதிகள் தயார்படுத்தப்பட்டுள்ளன.

மத்திய அரசு மருத்துவமனைகளில் போதிய மருந்துகள் மற்றும் படுக்கை வசதிகள் தயார்படுத்தப்பட்டுள்ளன.

admin

Recent Posts

பிக் பாஸ் கேமிக்கு பாய் பாய்

நேயர்களே, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவியது. இறுதியாக,…

5 months ago

ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடி உரை

தென்னாப்பிரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் ஜி-20 நாடுகள் மாநாட்டில், இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் ஆற்றிய உரை…

5 months ago

காசாவில் அல்-ஜசிரா பத்திரிகையாளர்கள் ஐந்து பேர் பலி

காசா பகுதியில் தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. காசாவின் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே…

8 months ago

தேர்தல் ஆணையம் நீதிமன்றம் அல்ல ப.சிதம்பரம் கருத்து

அன்பார்ந்த நேயர்களே, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து, இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி…

8 months ago

தங்கம் விலை அதிரடி சரிவு சவரனுக்கு ₹560 குறைவு

கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து உயர்ந்துவந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. இந்த விலை வீழ்ச்சி, தங்கம்…

8 months ago

“திருமா எனது நண்பர்” நயினார் நாகேந்திரன் பேட்டி!

"திருமா எனது நண்பர்" நயினார் நாகேந்திரன் பேட்டி! திருமாவளவன் ஒரு கூட்டணிகுள் இருக்கும் வரை கூட்டணிக்கு வருவாரா என நாம்…

8 months ago