tamilnadu

பட்டாசு ஆலைகளிலும் தொழிலாளர்களின் பாதுகாப்பு வசதிகள் குறித்து சோதனை மேற்கொள்ள வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

பட்டாசு ஆலைகளிலும் தொழிலாளர்களின் பாதுகாப்பு வசதிகள் குறித்து சோதனை மேற்கொள்ள வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

பொம்மையாபுரம் கிராமத்தில் பாலாஜி என்பவருக்கு சொந்தமான சாய்நாத் பட்டாசு ஆலை உராய்வு காரணமாக வெடி விபத்து ஏற்பட்டது.

வேல்முருகன், நாகராஜ், கண்ணன், காமராஜ், சிவக்குமார், மீனாட்சிசுந்திரம் ஆகிய 6 பேர் பரிதமாக உயிரிழந்தனர்.

இரண்டு பேர் 90% தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு விருதுநகர் மற்றும் மதுரை அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் உயிரிழவர்களின் குடும்பத்திற்கு ரூ.4 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே, பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், ஆறு பேர் உயிரிழந்திருக்கும் செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. அவர்கள் குடும்பத்தினருக்கு, ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்களுக்கு உயரிய சிகிச்சை அளிக்க, மாவட்ட நிர்வாகத்தைக் கேட்டுக் கொள்கிறேன்.

விதிமுறைகளை மீறியும், உரியப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாமலும் ஆலை செயல்பட்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன்பாகவே, அனைத்து பட்டாசு ஆலைகளிலும், உரியப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனவா என்று சோதனை நடத்துமாறு, திமுக அரசை வலியுறுத்தியிருந்தோம்.

திமுக அரசு எந்த நடவடிக்கைகளும் எடுத்ததாகத் தெரியவில்லை. இனியும் தாமதிக்காமல், அனைத்து பட்டாசு ஆலைகளிலும், தொழிலாளர்களுக்கு உரியப் பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளனவா என்று சோதனை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க, திமுக அரசை வலியுறுத்துகிறோம்”

admin

Recent Posts

பிக் பாஸ் கேமிக்கு பாய் பாய்

நேயர்களே, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவியது. இறுதியாக,…

5 months ago

ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடி உரை

தென்னாப்பிரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் ஜி-20 நாடுகள் மாநாட்டில், இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் ஆற்றிய உரை…

5 months ago

காசாவில் அல்-ஜசிரா பத்திரிகையாளர்கள் ஐந்து பேர் பலி

காசா பகுதியில் தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. காசாவின் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே…

8 months ago

தேர்தல் ஆணையம் நீதிமன்றம் அல்ல ப.சிதம்பரம் கருத்து

அன்பார்ந்த நேயர்களே, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து, இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி…

8 months ago

தங்கம் விலை அதிரடி சரிவு சவரனுக்கு ₹560 குறைவு

கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து உயர்ந்துவந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. இந்த விலை வீழ்ச்சி, தங்கம்…

8 months ago

“திருமா எனது நண்பர்” நயினார் நாகேந்திரன் பேட்டி!

"திருமா எனது நண்பர்" நயினார் நாகேந்திரன் பேட்டி! திருமாவளவன் ஒரு கூட்டணிகுள் இருக்கும் வரை கூட்டணிக்கு வருவாரா என நாம்…

8 months ago