போராட்டங்களை நடத்த போலீசார் பாகுபாடு காட்டுவதில்லை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து!
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை,அண்ணா பல்கலை பதிவாளரை நீக்க வேண்டும் எனவும் விவாதங்கள் நடைபெற்றது.
இதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,
போராட்டம் ,ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என்றால் முன்கூட்டியே அனுமதி வாங்க வேண்டும்.
காவல்துறையின் கட்டுப்பாடு. நேற்றுக்கூட ஆளுங்கட்சி சார்பிலும் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.
ஆளுங்கட்சியாகவே இருந்தாலும் அனுமதியின்றி போராட்டம் நடத்திய திமுகவினர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. போராட்டங்களை நடத்த அனுமதி வழங்குவதில் போலீசார் பாகுபாடு காட்டுவதில்லை” என்றார்.
மதுரை மேலூர் அருகே உள்ள அரிட்டாப்பட்டி உள்ளிட்ட 48 கிராமங்களை உள்ளடக்கி 5,000 ஏக்கர் பரப்பளவு கொண்ட பகுதிகளில் மத்திய அரசு அமைக்கவுள்ள டங்ஸ்டன் கனிம சுரங்க திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் நேற்று மதுரை தமுக்கம் மைதானத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தால் அப்பகுதியில் பல்லாயிரக்கணாக்கானோர் திரண்டதால் 2000 போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.
தென் மண்டல ஐ.ஜி. உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திய பின் போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.
நடைபயண பேரணி மேற்கொண்டதாக போராட்டத்தில் ஈடுபட்ட 5000 பேர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் மதுரை தல்லாகுளம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
3,000 ஆண்கள் மற்றும் 2,000 பெண்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நேயர்களே, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவியது. இறுதியாக,…
தென்னாப்பிரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் ஜி-20 நாடுகள் மாநாட்டில், இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் ஆற்றிய உரை…
காசா பகுதியில் தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. காசாவின் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே…
அன்பார்ந்த நேயர்களே, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து, இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி…
கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து உயர்ந்துவந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. இந்த விலை வீழ்ச்சி, தங்கம்…
"திருமா எனது நண்பர்" நயினார் நாகேந்திரன் பேட்டி! திருமாவளவன் ஒரு கூட்டணிகுள் இருக்கும் வரை கூட்டணிக்கு வருவாரா என நாம்…