tamilnadu

14 வயதில் சாதனை படைத்த வைபவ் சூர்யவன்ஷி!

14 வயதில் சாதனை படைத்த வைபவ் சூர்யவன்ஷி!

ஐபிஎல் தொடரின் 18வது சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதில் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெற்ற 47வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின.இந்த போட்டியில் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து குஜராத் டைட்டன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சாய் சுதர்சன் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் களமிறங்கினர்.

சிறப்பாக ஆடிய சாய் சுதர்சன் 39 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து அபாரமாக விளையாடிய சுப்மன் கில் 84 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.பின்னர் களமிறங்கிய வாஷிங்டன் சுந்தர் 13 ரன்களிலும், ராகுல் தெவாத்தியா 9 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர்.

இறுதியில், குஜராத் டைட்டன்ஸ் அணி 209 ரன்கள் குவித்தது. அந்த அணியின் ஜோஸ் பட்லர் 50 ரன்களுடனும், ஷாருக் கான் 5 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பந்துவீச்சில் மகிஷ் தீக்ஷனா 2 விக்கெட்டுகளையும், ஆர்ச்சர் மற்றும் சந்தீப் சர்மா ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

தொடர்ந்து 210 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் வைபவ் சூர்யவன்ஷி ஆகியோர் களம் புகுந்தனர்.குறிப்பாக வைபவ் சூர்யவன்ஷி சிக்ஸர்களை பறக்கவிட்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். அவர் 35 பந்துகளில் 11 சிக்ஸர்கள் மற்றும் 7 பவுண்டரிகளுடன் சதம் அடித்து அசத்தினார். இறுதியில் அவர் 101 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

அவரைத் தொடர்ந்து களமிறங்கிய நிதிஷ் ராணா 4 ரன்களில் வெளியேறினார். இறுதியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 212 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் முக்கிய நாயகனாக பார்க்கப்படுபவர் 14 வயதான வைபவ் சூர்யவன்ஷி தான். அவர் தனது அதிரடியான சதத்தின் மூலம் பல சாதனைகளை படைத்துள்ளார். ஐபிஎல் போட்டிகளின் வரலாற்றில் மிகக் குறைந்த வயதில் சதம் அடித்த வீரர் என்ற புதிய சாதனையை அவர் படைத்துள்ளார்.

ஐபிஎல் வரலாற்றில் கிறிஸ் கெய்ல் 30 பந்துகளில் சதம் அடித்ததே அதிவேக சதமாக இருந்தது. தற்போது வைபவ் சூர்யவன்ஷி 35 பந்துகளில் சதம் அடித்து அந்த பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.சிறு வயதிலேயே இத்தகைய பெரிய சாதனையை நிகழ்த்திய வைபவிற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

admin

Recent Posts

பிக் பாஸ் கேமிக்கு பாய் பாய்

நேயர்களே, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவியது. இறுதியாக,…

5 months ago

ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடி உரை

தென்னாப்பிரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் ஜி-20 நாடுகள் மாநாட்டில், இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் ஆற்றிய உரை…

5 months ago

காசாவில் அல்-ஜசிரா பத்திரிகையாளர்கள் ஐந்து பேர் பலி

காசா பகுதியில் தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. காசாவின் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே…

8 months ago

தேர்தல் ஆணையம் நீதிமன்றம் அல்ல ப.சிதம்பரம் கருத்து

அன்பார்ந்த நேயர்களே, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து, இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி…

8 months ago

தங்கம் விலை அதிரடி சரிவு சவரனுக்கு ₹560 குறைவு

கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து உயர்ந்துவந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. இந்த விலை வீழ்ச்சி, தங்கம்…

8 months ago

“திருமா எனது நண்பர்” நயினார் நாகேந்திரன் பேட்டி!

"திருமா எனது நண்பர்" நயினார் நாகேந்திரன் பேட்டி! திருமாவளவன் ஒரு கூட்டணிகுள் இருக்கும் வரை கூட்டணிக்கு வருவாரா என நாம்…

8 months ago