இன்றைய சமையல் :உளுந்து களி
உளுந்து களி என்பது தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவு வகை.
இது பெண்களுக்கு மிகவும் ஆரோக்கியமானது,
குறிப்பாக எலும்புத் தசைகள் மற்றும் நரம்பு பலத்திற்கு உதவுகிறது.
முழு உளுந்து – 1 கப்
கருப்பட்டி – 1 ¼ கப்
நெய் – 3-4 மேசைக்கரண்டி
ஏலக்காய் தூள் – 1/4 டீஸ்பூன்
தண்ணீர் – 2 ½ கப்
உளுந்தை வாணலியில் மிதமான தீயில் நன்கு வாசனை வரும்வரை வறுக்கவும்.
வறுத்ததும் ஆறவிட்டு மிக்ஸியில் இடித்து பொடியாக ஆக்கவும்
கருப்பட்டியை சிறு துண்டுகளாக நறுக்கி, 1 கப் தண்ணீரில் கொதிக்கவைக்கவும்.
கருப்பட்டி முழுமையாக கரையும் வரை கிளறவும்.பின்னர் இதனை வடிகட்டி வைத்து கொள்ளவும்.
ஒரு அடிகனமான வாணலியில், 2 ½ கப் தண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும்.
கொதிக்கும்போது, வறுத்த உளுந்து மாவை மெதுவாக சேர்த்துக் கிளறவும்
பிறகு, வடிகட்டிய கருப்பட்டி பாகுவை சேர்த்து கிளறவும்.
தேவையான அளவு நெய் சேர்த்து, நன்றாக கிளறி களி பதமாக வரும் வரை சமைக்கவும்.
கடைசியாக ஏலக்காய் தூள் சேர்க்கவும்.
இதை சிறிய உருண்டைகளாக உருட்டி பரிமாறலாம்.
இதனுடன் நல்லெண்ணெய் சேர்த்தும் சாப்பிடலாம்
நேயர்களே, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவியது. இறுதியாக,…
தென்னாப்பிரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் ஜி-20 நாடுகள் மாநாட்டில், இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் ஆற்றிய உரை…
காசா பகுதியில் தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. காசாவின் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே…
அன்பார்ந்த நேயர்களே, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து, இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி…
கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து உயர்ந்துவந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. இந்த விலை வீழ்ச்சி, தங்கம்…
"திருமா எனது நண்பர்" நயினார் நாகேந்திரன் பேட்டி! திருமாவளவன் ஒரு கூட்டணிகுள் இருக்கும் வரை கூட்டணிக்கு வருவாரா என நாம்…