cinema

அமரன் சாதனையை நெருங்க முடியாத ரெட்ரோ

அமரன் சாதனையை நெருங்க முடியாத ரெட்ரோ

 

சிவகார்த்திகேயனின் “அமரன்” படத்தின் முதல் நாள் வசூல் சாதனையை முறியடிக்கத் தவறிவிட்டது ரெட்ரோ திரைப்படம்

சூர்யாவின் திரைப்படமான ரெட்ரோ மே 1ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகியது.

இந்த படத்தை பிரபல இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியிருக்கிறார்.

இதில் பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், நாசர், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்
.
சூர்யா மற்றும் ஜோதிகா 2D நிறுவனம் மூலம் தயாரிப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

“கங்குவா” திரைப்படத்தின் தோல்விக்குப் பிறகு ரசிகர்கள் மத்தியில் ரெட்ரோ திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால் திரைப்படம் வெளியான பிறகு, விமர்சன ரீதியாக கருத்துகளைப் பெற்றுள்ளது. முதல் பாதி நன்றாக இருப்பதாகவும், இரண்டாம் பாதி சுமாராக இருப்பதாகவும் தெரிவித்து வருகின்றனர்.

ரெட்ரோ திரைப்படம் வெளியான முதல் நாளில் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.11.6 கோடி வசூல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இது சூர்யாவின் முந்தைய படமான “கங்குவா”வின் முதல் நாள் வசூலை விட அதிகம்.

இருப்பினும், ரெட்ரோ விடுமுறை நாளில் வெளியாகி இருந்தும், “கங்குவா”வின் வசூலை விட சற்று அதிகமாகவே வசூலித்துள்ளது.

சிவகார்த்திகேயனின் அமரன் படம் தீபாவளி அன்று வெளியாகி தமிழ்நாட்டில் ரூ. 15 கோடி முதல் நாள் வசூல் செய்தது. ரெட்ரோ படம் அதைவிட ரூ. 3.4 கோடி குறைவாக வசூலித்துள்ளது.

இதனால் அமரன் சாதனையை ரெட்ரோ முறியடிக்க முடியவில்லை.

marieeswari

Recent Posts

பிக் பாஸ் கேமிக்கு பாய் பாய்

நேயர்களே, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவியது. இறுதியாக,…

5 months ago

ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடி உரை

தென்னாப்பிரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் ஜி-20 நாடுகள் மாநாட்டில், இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் ஆற்றிய உரை…

5 months ago

காசாவில் அல்-ஜசிரா பத்திரிகையாளர்கள் ஐந்து பேர் பலி

காசா பகுதியில் தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. காசாவின் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே…

8 months ago

தேர்தல் ஆணையம் நீதிமன்றம் அல்ல ப.சிதம்பரம் கருத்து

அன்பார்ந்த நேயர்களே, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து, இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி…

8 months ago

தங்கம் விலை அதிரடி சரிவு சவரனுக்கு ₹560 குறைவு

கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து உயர்ந்துவந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. இந்த விலை வீழ்ச்சி, தங்கம்…

8 months ago

“திருமா எனது நண்பர்” நயினார் நாகேந்திரன் பேட்டி!

"திருமா எனது நண்பர்" நயினார் நாகேந்திரன் பேட்டி! திருமாவளவன் ஒரு கூட்டணிகுள் இருக்கும் வரை கூட்டணிக்கு வருவாரா என நாம்…

9 months ago