சிபிஎஸ்இ நடவடிக்கைக்கு பள்ளிக் கல்வி அமைச்சர் கடும் எதிர்ப்பு
பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திருச்சியில் செய்தியாளர்கள் சந்திப்பில் மத்திய அரசு மற்றும் சிபிஎஸ்இ (CBSE) பள்ளிகளின் சில நடவடிக்கைகள் குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார்.
தமிழ்நாட்டில் 8ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவரும் தேர்ச்சி பெறும் விதமாக அரசாங்கம் நடவடிக்கைகள் எடுத்து இருக்கிறது .
தேசியக் கல்விக் கொள்கையில் 3, 5, 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அந்த தேர்வில் மதிப்பெண் பெறாவிட்டால் அவர்கள் தோல்வி அடைவார்கள்.
சிறிய வயதிலேயே தேர்வு தோல்வியால் (fail) மாணவர்கள் இடைநிறுத்தம் செய்வது அதிகரிக்கும்.அதனால் 8ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி என வைத்துளோம்.9,10ம் வகுப்பில் தான் தேர்வு நடத்தப்படும் என்றும் அமைச்சர் கூறினார்
தேசியக் கல்விக் கொள்கையை மத்திய அரசு படிப்படியாக அமல்படுத்த முனைப்புடன் உள்ளது. ஆனால், தமிழ்நாடு அரசு இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது.
தேசியக் கல்விக் கொள்கையின் ஒரு பகுதியாக, சிபிஎஸ்இ பள்ளிகளில் என்சிஇஆர்டி பாடப்புத்தகங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இது வரலாற்றை மறைக்கும் முயற்சி என்று அமைச்சர் குற்றம் சாட்டுகிறார்.
3, 5, 8ஆம் வகுப்பு மாணவர்களை கல்வியில் பின்தங்கியவர்கள் என்று கூறி, சிபிஎஸ்இ பள்ளிகள் பெயில் செய்வதை பெற்றோர் ஏற்கக் கூடாது.இதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்றும், இது மாணவர்களின் மனநலனையும் பாதிக்கக்கூடும் என்றும் அவர் கவலை தெரிவித்தார்.
அனைத்து மாணவர்களின் நலனுக்காகவும் மாநிலக் கல்விக் கொள்கையை வலுப்படுத்துவதற்காகவும் திமுக அரசு போராடி வருகிறது என்று கூறினார்.
தரமான கல்வியை வழங்குவதற்காக அரசு பல புதிய திட்டங்களை உருவாக்கி வருகிறது.
நேயர்களே, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவியது. இறுதியாக,…
தென்னாப்பிரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் ஜி-20 நாடுகள் மாநாட்டில், இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் ஆற்றிய உரை…
காசா பகுதியில் தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. காசாவின் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே…
அன்பார்ந்த நேயர்களே, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து, இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி…
கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து உயர்ந்துவந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. இந்த விலை வீழ்ச்சி, தங்கம்…
"திருமா எனது நண்பர்" நயினார் நாகேந்திரன் பேட்டி! திருமாவளவன் ஒரு கூட்டணிகுள் இருக்கும் வரை கூட்டணிக்கு வருவாரா என நாம்…