cinema

காப்புரிமை விவகாரத்தில் A.R.ரஹ்மானுக்கு இடைக்கால தடை

காப்புரிமை விவகாரத்தில் A.R.ரஹ்மானுக்கு இடைக்கால தடை

 

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் “வீர ராஜ வீர” பாடலுக்காக இரண்டு கோடி ரூபாய் அபராதம் செலுத்த டெல்லி உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான “பொன்னியின் செல்வன்-2” திரைப்படத்தில் இடம்பெற்ற “வீர ராஜ வீர” பாடல், ஃபயாஸ் வசிஃபுதின் டாகர் என்பவரின் தந்தை மற்றும் உறவினர் இசையமைத்த “சிவா ஸ்துதி” பாடலின் நகல் என்று கூறி அவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி “வீர ராஜ வீர” பாடல் சிறிய மாற்றங்களுடன் பயன்படுத்தப்பட்டது என கூறி, ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் இரண்டு கோடி ரூபாய் அபராதத்தை செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், இந்த உத்தரவை எதிர்த்து ஏ.ஆர்.ரஹ்மான் மேல்முறையீடு செய்தார்.

இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் அபராதம் செலுத்துமாறு உத்தரவிட்ட தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்துள்ளது.

இந்த வழக்கு மே 23 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு விசாரணை நடைபெறும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

இதன் மூலம், ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தற்போது இரண்டு கோடி ரூபாய் அபராதம் செலுத்த வேண்டியதில்லை.

marieeswari

Recent Posts

பிக் பாஸ் கேமிக்கு பாய் பாய்

நேயர்களே, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவியது. இறுதியாக,…

5 months ago

ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடி உரை

தென்னாப்பிரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் ஜி-20 நாடுகள் மாநாட்டில், இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் ஆற்றிய உரை…

5 months ago

காசாவில் அல்-ஜசிரா பத்திரிகையாளர்கள் ஐந்து பேர் பலி

காசா பகுதியில் தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. காசாவின் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே…

8 months ago

தேர்தல் ஆணையம் நீதிமன்றம் அல்ல ப.சிதம்பரம் கருத்து

அன்பார்ந்த நேயர்களே, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து, இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி…

8 months ago

தங்கம் விலை அதிரடி சரிவு சவரனுக்கு ₹560 குறைவு

கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து உயர்ந்துவந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. இந்த விலை வீழ்ச்சி, தங்கம்…

8 months ago

“திருமா எனது நண்பர்” நயினார் நாகேந்திரன் பேட்டி!

"திருமா எனது நண்பர்" நயினார் நாகேந்திரன் பேட்டி! திருமாவளவன் ஒரு கூட்டணிகுள் இருக்கும் வரை கூட்டணிக்கு வருவாரா என நாம்…

8 months ago