tamilnadu

12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளில் திடீர் மாற்றம்

12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளில் திடீர் மாற்றம்

 

தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் முன்கூட்டியே வெளியாகவுள்ளதாக முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மார்ச் 3ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்றது.அதில் 8 லட்சத்து 21 ஆயிரம் மாணவர்கள் எழுதியுள்ளனர்.

இந்தத் தேர்வு முடிவுகள் மே 9ஆம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது விடைத்தாள் திருத்தும் பணிகள் மற்றும் தேர்வு முடிவுகள் தயாரிக்கும் பணிகள் விரைவாக நிறைவடைந்திருப்பதால், மே 8ஆம் தேதியே முடிவுகள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியானவுடன், மாணவர்கள் தமிழ்நாடு அரசுத் தேர்வுகளின் இணையதளங்களான tnresults.nic.in மற்றும் dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதியைப் பயன்படுத்தித் தேர்வு முடிவுகளைத் தெரிந்துகொள்ளலாம்.

பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு நாளை உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் அவர்களால் தொடங்கி வைக்கப்பட உள்ளது.

இந்த நிகழ்ச்சியில், கலந்தாய்வு அட்டவணை, விண்ணப்பக் கட்டணம் மற்றும் காலியிடங்கள் போன்ற முக்கிய விவரங்களை வெளியிடவுள்ளார்.

marieeswari

Recent Posts

பிக் பாஸ் கேமிக்கு பாய் பாய்

நேயர்களே, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவியது. இறுதியாக,…

5 months ago

ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடி உரை

தென்னாப்பிரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் ஜி-20 நாடுகள் மாநாட்டில், இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் ஆற்றிய உரை…

5 months ago

காசாவில் அல்-ஜசிரா பத்திரிகையாளர்கள் ஐந்து பேர் பலி

காசா பகுதியில் தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. காசாவின் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே…

8 months ago

தேர்தல் ஆணையம் நீதிமன்றம் அல்ல ப.சிதம்பரம் கருத்து

அன்பார்ந்த நேயர்களே, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து, இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி…

8 months ago

தங்கம் விலை அதிரடி சரிவு சவரனுக்கு ₹560 குறைவு

கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து உயர்ந்துவந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. இந்த விலை வீழ்ச்சி, தங்கம்…

8 months ago

“திருமா எனது நண்பர்” நயினார் நாகேந்திரன் பேட்டி!

"திருமா எனது நண்பர்" நயினார் நாகேந்திரன் பேட்டி! திருமாவளவன் ஒரு கூட்டணிகுள் இருக்கும் வரை கூட்டணிக்கு வருவாரா என நாம்…

8 months ago