கூலி பட வீடியோவை வெளியிட்டது படக்குழு
‘கூலி’ திரைப்பட படக்குழு “அரங்கம் அதிரட்டுமே, விசிலு பறக்கட்டுமே..” என்ற பின்னணி பாடல் வீடியோவை வெளியிட்டுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘கூலி’ திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
ரஜினிகாந்த் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணி முதன்முறையாக இணைவதால் இப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.
இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். இவரது இசை ஏற்கனவே வெளியான டைட்டில் டீசரில் பெரும் வரவேற்பை பெற்றது.
இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக அறிவிப்பு வெளியானது.
தற்போது, திரைப்படம் வெளியாக இன்னும் 100 நாட்களே உள்ள நிலையில், படக்குழு ஒரு ஸ்பெஷல் வீடியோவை வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில் “அரங்கம் அதிரட்டுமே, விசிலு பறக்கட்டுமே..” என்ற பின்னணி பாடல் இடம்பெற்றுள்ளது.
இந்த பாடல் மற்றும் காட்சிகள் படத்தின் எதிர்பார்ப்பை ரசிகர்களுக்கு அதிகரித்துள்ளது.
நேயர்களே, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவியது. இறுதியாக,…
தென்னாப்பிரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் ஜி-20 நாடுகள் மாநாட்டில், இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் ஆற்றிய உரை…
காசா பகுதியில் தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. காசாவின் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே…
அன்பார்ந்த நேயர்களே, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து, இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி…
கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து உயர்ந்துவந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. இந்த விலை வீழ்ச்சி, தங்கம்…
"திருமா எனது நண்பர்" நயினார் நாகேந்திரன் பேட்டி! திருமாவளவன் ஒரு கூட்டணிகுள் இருக்கும் வரை கூட்டணிக்கு வருவாரா என நாம்…