வாடிகனில் புதிய போப் தேர்ந்தெடுப்பு -செல்போன் சிக்னல்கள் துண்டிப்பு
கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான போப் பிரான்சிஸ் ஏப்ரல் 21-ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார்.
அவரது மறைவுக்கு உலகத் தலைவர்கள் மற்றும் லட்சக்கணக்கான மக்கள் இரங்கல் தெரிவித்தனர்.
போப் பிரான்சிஸின் உடல் அவரது விருப்பப்படி, ரோமில் உள்ள புனித மேரி தேவாலயத்தில் ஏப்ரல் 26-ம் தேதி நல்லடக்கம் செய்யப்பட்டது.
போப் பிரான்சிஸின் மறைவைத் தொடர்ந்து, புதிய போப்பை தேர்ந்தெடுகிறார்கள்.
கத்தோலிக்க திருச்சபையின் புதிய போப்பை தேர்ந்தெடுப்பதற்கான
முக்கியமான மாநாடு வாடிகன் நகரில் நடைபெற உள்ளது.
இந்த வாக்கெடுப்பு மாநாடு, “கான்க்ளேவ்” என்று அழைக்கப்படுகிறது. இந்த மாநாடு இன்று வாடிகனில் நடைபெற உள்ளது.
கான்க்ளேவ்வில், 133 கார்டினல்கள் வாக்களித்து புதிய போப்பை தேர்வு செய்வார்கள்.
இந்த மாநாட்டின் ரகசியத்தன்மையை பாதுகாக்கும் விதமாக, வாடிகனில் பிற்பகல் மூன்று மணி முதல் செல்போன் சிக்னல்கள் செயலிழக்கச் செய்யப்பட உள்ளன.
அவர்கள் வாக்கெடுப்பு நடைபெறும் வரை முழுமையான தனிமையில், வெளி தொடர்பில்லாமல், ரகசியத்தை கடைப்பிடிக்க சத்தியம் செய்து செயல்படுவார்கள்.
நேயர்களே, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவியது. இறுதியாக,…
தென்னாப்பிரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் ஜி-20 நாடுகள் மாநாட்டில், இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் ஆற்றிய உரை…
காசா பகுதியில் தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. காசாவின் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே…
அன்பார்ந்த நேயர்களே, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து, இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி…
கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து உயர்ந்துவந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. இந்த விலை வீழ்ச்சி, தங்கம்…
"திருமா எனது நண்பர்" நயினார் நாகேந்திரன் பேட்டி! திருமாவளவன் ஒரு கூட்டணிகுள் இருக்கும் வரை கூட்டணிக்கு வருவாரா என நாம்…