வெளியானது பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள்
தமிழகத்தில் 2025 ஆம் ஆண்டுக்கான பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று (மே 8, 2025) வெளியிடப்பட்டுள்ளன.
பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பொதுத் தேர்வு முடிவுகளை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.
மார்ச் 3 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் நடைபெற்றன.
ஏப்ரல் 4 ஆம் தேதி விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கி,ஏப்ரல் 15 ஆம் தேதியே முடிவடைந்தது.
இந்த ஆண்டு மொத்தம் 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர்.
தமிழகம் முழுவதும் 3 ஆயிரத்து 316 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் மொத்தம் 7 லட்சத்து 53 ஆயிரத்து 142 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் 96.70%
மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 93.16%
மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் 91.44% ஆக உள்ளது.
மாவட்ட அளவில் அரியலூர் மாவட்டம் 98.82% தேர்ச்சி பெற்று முதலிடத்தில் உள்ளது.
ஈரோடு (96.88%), திருப்பூர் (95.64%), கன்னியாகுமரி (95.06%) மற்றும் கடலூர் (94.99%) ஆகிய மாவட்டங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
தேர்வு முடிவுகளை மாணவர்கள் தமிழ்நாடு அரசுத் தேர்வுகளின் இணையதளங்களான tnresults.nic.in மற்றும் dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதியைப் பயன்படுத்தித் தேர்வு முடிவுகளைத் தெரிந்துகொள்ளலாம்.
நேயர்களே, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவியது. இறுதியாக,…
தென்னாப்பிரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் ஜி-20 நாடுகள் மாநாட்டில், இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் ஆற்றிய உரை…
காசா பகுதியில் தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. காசாவின் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே…
அன்பார்ந்த நேயர்களே, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து, இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி…
கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து உயர்ந்துவந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. இந்த விலை வீழ்ச்சி, தங்கம்…
"திருமா எனது நண்பர்" நயினார் நாகேந்திரன் பேட்டி! திருமாவளவன் ஒரு கூட்டணிகுள் இருக்கும் வரை கூட்டணிக்கு வருவாரா என நாம்…