Uncategorized

கோலாகலமாக நடைபெற்ற மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவம்

கோலாகலமாக நடைபெற்ற மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவம்

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவம் இன்று (மே 8, 2025) பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் சிறப்பாகவும், கோலாகலமாகவும் நடைபெற்றது.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்றாலும், சித்திரை மாதத்தில் நடைபெறும் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது.

இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் 29 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருவிழாவின் ஒவ்வொரு நாளும் மீனாட்சி அம்மனும், சுந்தரேசுவரரும் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் மற்றும் திக் விஜயம் ஆகிய நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது.

சித்திரை திருவிழாவின் பத்தாம் நாளான மீனாட்சி – சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெற்றது.

இதற்காக, சுவாமியும் அம்மனும் அதிகாலையில் எழுந்தருளி, நான்கு சித்திரை வீதிகளையும் சுற்றி வந்து திருக்கல்யாண மேடையில் ஓதுவார்களால் பன்னிரு திருமுறைகள் பாராயணம் செய்யப்பட்டது.

திருக்கல்யாண மேடையில் முதலில் சுப்பிரமணியசுவாமி தெய்வானையுடனும், பின்னர் மீனாட்சி அம்மனும் சுந்தரேசுவரரும் வந்த பிறகு பவளகனிவாய் பெருமாளும் எழுந்தருளினார். தொடர்ந்து மீனாட்சி அம்மனுக்கும், சுந்தரேசுவரருக்கும் காப்பு கட்டும் வைபவம் மற்றும் பல்வேறு பூஜைகள் நடைபெற்றன.

மீனாட்சி அம்மனுக்கும், சுந்தரேஸ்வரருக்கும் மணப்பட்டு சாத்தும் நிகழ்வு நடைபெற்றது. கோயில் சார்பில் சுந்தரேஸ்வரருக்கு பட்டு பீதாம்பரமும், அம்மனுக்கு பட்டுச்சேலைகளும் அணிவிக்கப்பட்டன.

பெருமாள் மீனாட்சி அம்மனை தாரம் வார்த்துக் கொடுக்கும் நிகழ்வும் நடைபெற்றது.

வேத மந்திரங்கள் முழங்க,மங்கல வாத்தியங்கள் இசைக்கப்பட காலை 8.35 மணி முதல் 8.59 மணி வரையிலான மிதுன லக்னத்தில் மீனாட்சி அம்மனுக்கு வைரத்தால் ஆன மங்கல நாண் அணிவிக்கப்பட்டு திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது.

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இதில் கலந்து கொண்டனர்.திருக்கல்யாணம் முடிந்தவுடன், பெண்கள் தங்களது மாங்கல்யக் கயிற்றை புதுப்பித்துக்கொண்டனர்.

திருக்கல்யாண நிகழ்வைத் தொடர்ந்து சுவாமிக்கும், அம்மனுக்கும் பல்வேறு தீபாராதனைகள் காட்டப்பட்டன.

தங்கத்தால் ஆன 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த சந்தன கும்பா மற்றும் பன்னீர் தெளிப்பு கும்பா மூலம் சுவாமிக்கும் அம்மனுக்கும் பன்னீர் தெளிக்கப்பட்டது.

திருக்கல்யாண விழாவை முன்னிட்டு மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தலைமையில் 3 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

marieeswari

Recent Posts

பிக் பாஸ் கேமிக்கு பாய் பாய்

நேயர்களே, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவியது. இறுதியாக,…

5 months ago

ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடி உரை

தென்னாப்பிரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் ஜி-20 நாடுகள் மாநாட்டில், இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் ஆற்றிய உரை…

5 months ago

காசாவில் அல்-ஜசிரா பத்திரிகையாளர்கள் ஐந்து பேர் பலி

காசா பகுதியில் தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. காசாவின் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே…

8 months ago

தேர்தல் ஆணையம் நீதிமன்றம் அல்ல ப.சிதம்பரம் கருத்து

அன்பார்ந்த நேயர்களே, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து, இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி…

8 months ago

தங்கம் விலை அதிரடி சரிவு சவரனுக்கு ₹560 குறைவு

கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து உயர்ந்துவந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. இந்த விலை வீழ்ச்சி, தங்கம்…

8 months ago

“திருமா எனது நண்பர்” நயினார் நாகேந்திரன் பேட்டி!

"திருமா எனது நண்பர்" நயினார் நாகேந்திரன் பேட்டி! திருமாவளவன் ஒரு கூட்டணிகுள் இருக்கும் வரை கூட்டணிக்கு வருவாரா என நாம்…

8 months ago