tamilnadu

காற்றழுத்த தாழ்வு மற்றும் கனமழை எச்சரிக்கை

காற்றழுத்த தாழ்வு மற்றும் கனமழை எச்சரிக்கை

தென்மண்டல வானிலை ஆய்வு மையத்தின் தலைவர் திருமதி அமுதா அவர்கள் செய்தியாளர்களைச் சந்தித்து தமிழகத்தின் வானிலை அறிக்கையை வெளியிட்டார்.

இந்த ஆண்டு வழக்கத்தை விட 90% அதிகமான மழை பெய்துள்ளது என அவர் தெரிவித்தார்.

வரும் மே 22 ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு உருவாக வாய்ப்புள்ளது.மேலும் காற்றழுத்த தாழ்வு வடக்கு திசையை நோக்கி நகரக்கூடும் இதன் காரணமாக தமிழகத்தில் மேலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 14 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. மேலும், வட தமிழ்நாட்டின் பெரும்பாலான இடங்களிலும், தென் தமிழ்நாட்டின் சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்துள்ளது.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை மே 27 ஆம் தேதி தொடங்கும். அதன் பிறகு ஒரு சில நாட்களில் தமிழ்நாட்டிலும் தொடர்ந்து மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளான மன்னார் வளைகுடா, குமரி கடல் மற்றும் தென் தமிழக கடலோரப் பகுதிகளில் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இது அந்தப் பகுதிகளில் நிலவக்கூடிய மோசமான வானிலை காரணமாக பாதுகாப்பு நடவடிக்கையாகும்.

marieeswari

Recent Posts

பிக் பாஸ் கேமிக்கு பாய் பாய்

நேயர்களே, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவியது. இறுதியாக,…

5 months ago

ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடி உரை

தென்னாப்பிரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் ஜி-20 நாடுகள் மாநாட்டில், இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் ஆற்றிய உரை…

5 months ago

காசாவில் அல்-ஜசிரா பத்திரிகையாளர்கள் ஐந்து பேர் பலி

காசா பகுதியில் தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. காசாவின் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே…

8 months ago

தேர்தல் ஆணையம் நீதிமன்றம் அல்ல ப.சிதம்பரம் கருத்து

அன்பார்ந்த நேயர்களே, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து, இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி…

8 months ago

தங்கம் விலை அதிரடி சரிவு சவரனுக்கு ₹560 குறைவு

கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து உயர்ந்துவந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. இந்த விலை வீழ்ச்சி, தங்கம்…

8 months ago

“திருமா எனது நண்பர்” நயினார் நாகேந்திரன் பேட்டி!

"திருமா எனது நண்பர்" நயினார் நாகேந்திரன் பேட்டி! திருமாவளவன் ஒரு கூட்டணிகுள் இருக்கும் வரை கூட்டணிக்கு வருவாரா என நாம்…

9 months ago