cinema

விஜய் ஆண்டனியின் VA26 அப்டேட்

விஜய் ஆண்டனியின் VA26 அப்டேட்

 

விஜய் ஆண்டனி நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர் மற்றும் நடிகராக வலம்வருபவர் விஜய் ஆண்டனி.தற்போது தொடர்ந்து புதிய படங்களில் நடித்து வருகிறார். அவருடைய 26வது படம் (VA26) குறித்த புதிய அறிவிப்பு ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

விஜய் ஆண்டனி நடிக்கும் 26வது படத்திற்கு ‘Lawyer’ என பெயரிடப்பட்டுள்ளது.

இப்படத்தின் First Look Poster வெளியிடப்பட்டுள்ளது.

போஸ்டரில் விஜய் ஆண்டனி வழக்கறிஞராக காட்சியளிக்கிறார்.வழக்கறிஞராக நடிப்பது அவருடைய புதிய தோற்றமாக இருக்கிறது.

விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்பரேஷன் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.

படப்பிடிப்பு ஜூன் மாதம் ஆரம்பமாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

சமூக நீதிக்காக போராடும் வழக்கறிஞர் கதையை மையமாகக் கொண்டு அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் ஆண்டனியின் மற்றொரு படத்துக்கு ‘மார்கன்’ என பெயர் வைத்துள்ளனர்.

லியோ ஜான் பால் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தில், அஜய் தீஷன், சமுத்திரக்கனி, மகாநதி சங்கர், பிரிகடா, வினோத் சாகர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் ஜூன் 27 ஆம் தேதி வெளியாகிறது.

விஜய் ஆண்டனி இந்தப் படத்திற்கும் இசையமைப்பாளராக பணியாற்றுகிறார்.

ரசிகர்கள் இப்போது ஜூன் மாத படப்பிடிப்பையும், விரைவில் வெளியாவகின்ற ‘மார்கன்’ படத்தையும் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

marieeswari

Recent Posts

பிக் பாஸ் கேமிக்கு பாய் பாய்

நேயர்களே, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவியது. இறுதியாக,…

5 months ago

ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடி உரை

தென்னாப்பிரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் ஜி-20 நாடுகள் மாநாட்டில், இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் ஆற்றிய உரை…

5 months ago

காசாவில் அல்-ஜசிரா பத்திரிகையாளர்கள் ஐந்து பேர் பலி

காசா பகுதியில் தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. காசாவின் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே…

8 months ago

தேர்தல் ஆணையம் நீதிமன்றம் அல்ல ப.சிதம்பரம் கருத்து

அன்பார்ந்த நேயர்களே, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து, இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி…

8 months ago

தங்கம் விலை அதிரடி சரிவு சவரனுக்கு ₹560 குறைவு

கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து உயர்ந்துவந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. இந்த விலை வீழ்ச்சி, தங்கம்…

8 months ago

“திருமா எனது நண்பர்” நயினார் நாகேந்திரன் பேட்டி!

"திருமா எனது நண்பர்" நயினார் நாகேந்திரன் பேட்டி! திருமாவளவன் ஒரு கூட்டணிகுள் இருக்கும் வரை கூட்டணிக்கு வருவாரா என நாம்…

8 months ago