திமுக கட்சியில் இருந்து அரக்கோணம் தெய்வச்செயல் நீக்கம்
திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் தெய்வச்செயல் என்பவர் மீது புகார்கள் எழுந்துள்ள நிலையில், கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அரக்கோணம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர், திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் தெய்வச்செயல் தன்னை காதலிப்பதாகக் கூறி, வலுக்கட்டாயமாகக் கடத்திச் சென்று திருமணம் செய்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
தெய்வச்செயல் ஏற்கனவே திருமணமானவர் என்றும், அவர் பல பெண்களை ஏமாற்றியிருப்பதாகவும் அந்த மாணவி புகார் அளித்துள்ளார்.
இந்த மாணவி மட்டுமல்லாமல், மேலும் ஒரு பெண் தெய்வச்செயல் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
இந்த விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இந்தச் சம்பவத்தைக் கடுமையாகக் கண்டித்து அறிக்கை வெளியிட்டதுடன், கண்டனப் போராட்டத்தையும் அறிவித்தார்.
இதனைத்தொடர்ந்து திமுக இளைஞரணி செயலாளரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், தெய்வச்செயலை கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்குவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
உதயநிதி ஸ்டாலின் தெய்வச்செயல் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக, ம.கவியரசு என்பவர், அந்தப் பொறுப்பில் நியமிக்கப்படுகிறார்என அறிக்கை வெளியிட்டார்.
இந்த விவகாரம் குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
நேயர்களே, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவியது. இறுதியாக,…
தென்னாப்பிரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் ஜி-20 நாடுகள் மாநாட்டில், இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் ஆற்றிய உரை…
காசா பகுதியில் தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. காசாவின் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே…
அன்பார்ந்த நேயர்களே, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து, இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி…
கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து உயர்ந்துவந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. இந்த விலை வீழ்ச்சி, தங்கம்…
"திருமா எனது நண்பர்" நயினார் நாகேந்திரன் பேட்டி! திருமாவளவன் ஒரு கூட்டணிகுள் இருக்கும் வரை கூட்டணிக்கு வருவாரா என நாம்…