tamilnadu

எஸ்.பி.வேலுமணி மாவட்ட ஆட்சியரிடம் மனு-10 நாட்கள் கெடு

எஸ்.பி.வேலுமணி மாவட்ட ஆட்சியரிடம் மனு-10 நாட்கள் கெடு

 

முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில், கோவை மாவட்ட அதிமுக உறுப்பினர்கள் கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்து மாவட்டத்தில் உள்ள பல்வேறு பிரச்சனைகளை தீர்க்கும் வகையில் கோரிக்கை மனு அளித்தனர்.

அந்த மனுவில் கோவை மாநகராட்சியில் சொத்து வரி, மின் கட்டண உயர்வு, குப்பை வரி மற்றும் அபராத வரி போன்றவற்றை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

மேலும் சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்பதால், அவற்றை உடனடியாகச் செப்பனிட வேண்டும்.

நொய்யல் ஆற்றில் தண்ணீர் வந்து கொண்டிருப்பதால், அதைச் சேமிக்க உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

மழையால் வாழை உட்பட பயிர்கள் சேதமடைந்துள்ளன.விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

தொண்டாமுத்தூர், கவுண்டம்பாளையம், மேட்டுப்பாளையம் பகுதிகளில் யானைகள் அடிக்கடி வருகின்றன.அதற்கு தடுப்புவேலி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விவசாய பெருங்குடியில் மண் எடுக்கப்பட்டதாக விவசாயிகளுக்கு அபராத வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன – அவற்றை ரத்து செய்ய வேண்டும்.மணல் கடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவித்திருந்தார்.

வைக்கப்பட்ட கோரிக்கைகள் மீது அதிகபட்சமாக 10 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என எஸ்.பி. வேலுமணி எச்சரித்தார்.

marieeswari

Recent Posts

பிக் பாஸ் கேமிக்கு பாய் பாய்

நேயர்களே, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவியது. இறுதியாக,…

5 months ago

ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடி உரை

தென்னாப்பிரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் ஜி-20 நாடுகள் மாநாட்டில், இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் ஆற்றிய உரை…

5 months ago

காசாவில் அல்-ஜசிரா பத்திரிகையாளர்கள் ஐந்து பேர் பலி

காசா பகுதியில் தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. காசாவின் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே…

8 months ago

தேர்தல் ஆணையம் நீதிமன்றம் அல்ல ப.சிதம்பரம் கருத்து

அன்பார்ந்த நேயர்களே, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து, இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி…

8 months ago

தங்கம் விலை அதிரடி சரிவு சவரனுக்கு ₹560 குறைவு

கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து உயர்ந்துவந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. இந்த விலை வீழ்ச்சி, தங்கம்…

8 months ago

“திருமா எனது நண்பர்” நயினார் நாகேந்திரன் பேட்டி!

"திருமா எனது நண்பர்" நயினார் நாகேந்திரன் பேட்டி! திருமாவளவன் ஒரு கூட்டணிகுள் இருக்கும் வரை கூட்டணிக்கு வருவாரா என நாம்…

8 months ago