கடலில் மூழ்கிய கப்பலால் ஏற்படும் எச்சரிக்கை
கொச்சி அருகே லைபீரியா நாட்டு சரக்கு கப்பல் கடலில் மூழ்கியதால் ரசாயனங்கள் கடலில் கலக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
திருவனந்தபுரம் விழிஞ்சம் துறைமுகத்தில் இருந்து கொச்சி நோக்கிச் சென்று கொண்டிருந்த லைபீரியா நாட்டு சரக்கு கப்பல் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.
தகவலறிந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு 21 மாலுமிகளை கேரள கடலோர காவல்படையினர் மீட்டனர்.
இந்த சரக்கு கப்பலில் மொத்தம் 640 கண்டெய்னர்கள் இருந்தன. அவற்றில் 13 கண்டெய்னர்களில் அதிக நச்சுத்தன்மை கொண்ட ரசாயனங்கள் இருந்ததால், கடலியல் சூழலுக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
மேலும், 12 கண்டெய்னர்களில் கால்சியம் கார்பைடு வேதிப்பொருள் இருந்தது. உப்புத் தண்ணீரில் கலந்தால் தீப்பற்றி எரியும் தன்மை கொண்டது என எச்சரிக்கப்பட்டுள்ளது.
சல்பர், சிட்டேன் (cetane) போன்ற நச்சுத்தன்மை கொண்ட மரைன் எரிவாயு எண்ணெய் கப்பலில் இருந்ததாக இந்திய கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.
சுமார் 100 கண்டெய்னர்கள் வரை கடலில் மூழ்கியிருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கடலில் கொட்டிய எரிபொருள் மற்றும் எண்ணெய்க் கழிவுகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.
ஆலப்புழா, கொல்லம், எர்ணாகுளம், திருவனந்தபுரம் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் அடித்துவரக்கூடிய எந்தவொரு பொருட்களையும் பொதுமக்கள் எடுக்க வேண்டாம் என கடலோர காவல்படை கேட்டுக்கொண்டுள்ளது.
இந்த விபத்து கேரள கடலோரப் பகுதியின் சுற்றுச்சூழல் மற்றும் கடல்வாழ் உயிரினங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.
நேயர்களே, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவியது. இறுதியாக,…
தென்னாப்பிரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் ஜி-20 நாடுகள் மாநாட்டில், இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் ஆற்றிய உரை…
காசா பகுதியில் தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. காசாவின் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே…
அன்பார்ந்த நேயர்களே, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து, இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி…
கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து உயர்ந்துவந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. இந்த விலை வீழ்ச்சி, தங்கம்…
"திருமா எனது நண்பர்" நயினார் நாகேந்திரன் பேட்டி! திருமாவளவன் ஒரு கூட்டணிகுள் இருக்கும் வரை கூட்டணிக்கு வருவாரா என நாம்…