tamilnadu

வினாத்தாள் கசிவு – செமஸ்டர் தேர்வு ஒத்திவைப்பு!

வினாத்தாள் கசிவு – செமஸ்டர் தேர்வு ஒத்திவைப்பு!

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு வினாத்தாள் கசிந்தது அதனால் செமஸ்டர் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டத்தில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் செயல்படுகிறது.

நெல்லை, தென்காசி, குமரி, தூத்துகுடி உள்பட பல மாவட்டங்களில் உள்ள 106 கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.

தற்போது இந்த கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடைபெற்று வருகிறது.

இன்று “இன்டஸ்ட்ரியல் லா” என்ற பாடத்திற்கான தேர்வு நடைபெற இருந்தது.

தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

பல்கலைக்கழகம் கீழ் இயங்கும் 106 கல்லூரிகளிலும் இண்டஸ்ட்ரியல் லா பாடத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வினாத்தாள் கசிவால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பல்கலைக்கழகம் சார்பாக தெரிவிக்கப்பட்டது.

இன்டஸ்ட்ரியல் லா பாடத் தேர்வுக்காக கல்லூரிகளுக்கு அனுப்பப்பட்ட வினாத்தாள்களை திரும்ப பெறும் பணி நடந்து வருகிறது.

வினாத்தாள் கசிந்த விவகாரம் நெல்லை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

admin

Recent Posts

பிக் பாஸ் கேமிக்கு பாய் பாய்

நேயர்களே, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவியது. இறுதியாக,…

5 months ago

ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடி உரை

தென்னாப்பிரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் ஜி-20 நாடுகள் மாநாட்டில், இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் ஆற்றிய உரை…

5 months ago

காசாவில் அல்-ஜசிரா பத்திரிகையாளர்கள் ஐந்து பேர் பலி

காசா பகுதியில் தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. காசாவின் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே…

8 months ago

தேர்தல் ஆணையம் நீதிமன்றம் அல்ல ப.சிதம்பரம் கருத்து

அன்பார்ந்த நேயர்களே, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து, இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி…

8 months ago

தங்கம் விலை அதிரடி சரிவு சவரனுக்கு ₹560 குறைவு

கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து உயர்ந்துவந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. இந்த விலை வீழ்ச்சி, தங்கம்…

8 months ago

“திருமா எனது நண்பர்” நயினார் நாகேந்திரன் பேட்டி!

"திருமா எனது நண்பர்" நயினார் நாகேந்திரன் பேட்டி! திருமாவளவன் ஒரு கூட்டணிகுள் இருக்கும் வரை கூட்டணிக்கு வருவாரா என நாம்…

9 months ago