tamilnadu

இ-ஆதார் அங்கீகாரத்தை கட்டாயமாக்கி தட்கல் டிக்கெட் முன்பதிவில் புதிய மாற்றம் – ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு!

இ-ஆதார் அங்கீகாரத்தை கட்டாயமாக்கி தட்கல் டிக்கெட் முன்பதிவில் புதிய மாற்றம் – ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு!

இ-ஆதார் அங்கீகாரத்தை கட்டாயமாக்கி தட்கல் டிக்கெட் முன்பதிவு நடைமுறையை இந்திய ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ் வெளியிட்ட இந்த மாற்றம் உண்மையான பயனர்கள் பயன்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது.

இந்திய ரயில்வே தட்கல் டிக்கெட் திட்டத்தில் சில மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்திய ரயில்வேயின் தட்கல் பயணச்சீட்டு முன்பதிவு முறையில் 2025 ஜூலை 1 முதல் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் அமலுக்கு வருகின்றன. இனி, ஐஆர்சிடிசி இணையதளம் மற்றும் மொபைல் செயலியில் தட்கல் பயணச்சீட்டு முன்பதிவு செய்ய, பயனர்கள் தங்கள் ஆதாரை உறுதிப்படுத்தியிருக்க வேண்டும்.

2025 ஜூலை 15 முதல், இந்த நடைமுறை மேலும் கடுமையாக்கப்படுகிறது. அன்று முதல், தட்கல் பயணச்சீட்டு முன்பதிவு செய்ய ஆதாருடன் இணைக்கப்பட்ட ஓடிபி (OTP) அடிப்படையிலான உறுதிப்பாடு கட்டாயமாக்கப்படும். இது அதிகாரபூர்வமான பிஆர்எஸ் கவுன்டர்கள் மற்றும் அங்கீகாரம் பெற்ற முகவர்கள் மூலமாக செய்யப்படும் முன்பதிவுகளுக்கும் பொருந்தும். அதாவது, பயணிகள் தங்கள் மொபைல் எண்ணுக்கு வரும் ஓடிபி-யை உறுதிப்படுத்திய பின்னரே தட்கல் பயணச்சீட்டைப் பெற முடியும்.

திறப்பு நேரத்திலிருந்து முதல் 30 நிமிடங்களுக்கு முன்பதிவு செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

குளிர்சாதன பெட்டி காலை 10:00 மணி முதல் 10:30 மணி வரை.

சாதாரண பெட்டி காலை 11:00 மணி முதல் 11:30 மணி வரை.
இந்த கட்டுப்பாடு நேரடியாக பொதுமக்களுக்கு பயணச்சீட்டு முன்பதிவு கிடைக்கும் வாய்ப்பை அதிகரிக்கவே செய்யப்படுகிறது”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

admin

Recent Posts

பிக் பாஸ் கேமிக்கு பாய் பாய்

நேயர்களே, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவியது. இறுதியாக,…

5 months ago

ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடி உரை

தென்னாப்பிரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் ஜி-20 நாடுகள் மாநாட்டில், இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் ஆற்றிய உரை…

5 months ago

காசாவில் அல்-ஜசிரா பத்திரிகையாளர்கள் ஐந்து பேர் பலி

காசா பகுதியில் தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. காசாவின் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே…

8 months ago

தேர்தல் ஆணையம் நீதிமன்றம் அல்ல ப.சிதம்பரம் கருத்து

அன்பார்ந்த நேயர்களே, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து, இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி…

8 months ago

தங்கம் விலை அதிரடி சரிவு சவரனுக்கு ₹560 குறைவு

கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து உயர்ந்துவந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. இந்த விலை வீழ்ச்சி, தங்கம்…

8 months ago

“திருமா எனது நண்பர்” நயினார் நாகேந்திரன் பேட்டி!

"திருமா எனது நண்பர்" நயினார் நாகேந்திரன் பேட்டி! திருமாவளவன் ஒரு கூட்டணிகுள் இருக்கும் வரை கூட்டணிக்கு வருவாரா என நாம்…

9 months ago