திருச்செந்தூர் முருகனுக்கு தமிழில் குடமுழுக்கு - கோயில் நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
உலகப்புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஜூலை 7-ந் தேதி குடமுழுக்கு நடைபெறவுள்ளது.
ஜூலை 1-ந் தேதி முதல் 7 நாட்கள் வேள்விச்சாலை நடைபெறவுள்ளது.
விழாவை தமிழில் வேதங்கள் ஓத வேண்டும் என கோரிக்கைகள் எழுந்து வந்தது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் குடமுழுக்கு தமிழில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா ஜூலை 7, 2025 அன்று காலை 6.15 மணி முதல் 6.50 மணிக்குள் நடைபெற உள்ளது.
இந்த விழாவிற்காக 8000 சதுர அடி பரப்பளவில், 76 குண்டங்களுடன் பிரம்மாண்டமான வேள்விச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது.
வேள்விச்சாலை வழிபாட்டு நாட்களில், வேதபாராயணம், திருமுறை விண்ணப்பம் மற்றும் நாதஸ்வர இன்னிசை நடைபெறும்.
மேலும், காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும், 64 ஓதுவார் மூர்த்திகளைக் கொண்டு, பக்கவாத்தியங்களுடன் பன்னிரு திருமுறைகள், திருப்புகழ் மற்றும் கந்தர் அனுபூதி முதலான செந்தமிழ் வேதங்கள் முற்றோதப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேயர்களே, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவியது. இறுதியாக,…
தென்னாப்பிரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் ஜி-20 நாடுகள் மாநாட்டில், இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் ஆற்றிய உரை…
காசா பகுதியில் தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. காசாவின் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே…
அன்பார்ந்த நேயர்களே, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து, இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி…
கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து உயர்ந்துவந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. இந்த விலை வீழ்ச்சி, தங்கம்…
"திருமா எனது நண்பர்" நயினார் நாகேந்திரன் பேட்டி! திருமாவளவன் ஒரு கூட்டணிகுள் இருக்கும் வரை கூட்டணிக்கு வருவாரா என நாம்…